கையகப்படுத்தும் நிலத்துக்கு மதிப்பீடு ஆலோசனை கூட்டத்தில் முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கையகப்படுத்தும் நிலத்துக்கு மதிப்பீடு ஆலோசனை கூட்டத்தில் முடிவு

Added : அக் 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு ரயில்வே கேட் அருகே நான்கு வழி பாலம் அமைப்பதற்காக நிலம் மதிப்பு குறித்த ஆலோசனை கூட்டம், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, கேரளாவக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த ரோட்டில், வடுகபாளையம் பிரிவு அருகே ரயில்வே கேட் அமைந்துள்ளது.
பொள்ளாச்சி - போத்தனுார் ரயில்பாதையில், கூடுதல் ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளதால், ரயில்பாதையை கடக்க மேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோவையில் நடந்த எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், மேம்பாலம் குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார்.
நிலம் கையகப்படுத்துவதற்காக, நில உரிமையாளர்கள், 31 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
நில உரிமையாளர்கள் கருத்து மற்றும் ஆட்சேபனை குறித்து கேட்டறியும் வகையில் கூட்டம் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம், நிலம் மதிப்பு குறித்த ஆலோசனை கூட்டம், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சப் - கலெக்டர் காயத்ரி முன்னிலை வகித்தார்.
தாசில்தார் செல்வபாண்டி, நேர்முக உதவியாளர் சியாமளா, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
வருவாய்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், நான்கு வழி மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு மொத்தம், 31 நில உரிமையாளர்களிடம், 1,785 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அரசு நிலம், 40.5 சதுர மீட்டர் நிலம் உள்ளது.
கையகப்படுத்தும் நிலத்துக்கான மதிப்பீடு குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில், வழிகாட்டி மதிப்பை விட, 225 மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X