வறண்டு கிடக்கும் முத்துப்பட்டி கண்மாய்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வறண்டு கிடக்கும் முத்துப்பட்டி கண்மாய்

Added : அக் 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:மதுரை முத்துப்பட்டி கண்மாய்க்கு மாடக்குளம் கண்மாயில் இருந்து தண்ணீர் திறந்து விடவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.அழகப்பன்நகர், டி.வி.எஸ்.நகர், சத்யசாய்நகர், கோவலன்நகர், எச்.எம்.எஸ்.,காலனி பகுதிகளின் நிலத்தடி நீராதாரமாகவும், புதுக்குளம் 1,2 பிட் பகுதிகளின் விவசாயத்திற்கு முத்துப்பட்டி கண்மாய் ஆதாரமாக உள்ளது. இக்கண்மாய் 7 ஆண்டுகளாக வறண்டு கிடக்கிறது. ஒரு மாதமாக பொதுப்பணித்துறை கரைகளை பலப்படுத்தி, கருவேலமரங்களை அகற்றி தண்ணீர் நிரப்பும் வகையில் தயார்படுத்தியது.இக்கண்மாய்க்கு மாடக்குளம் கண்மாய் மடை நீர் வரும். இதன் வரத்து கால்வாய்கள் திருவள்ளுவர் நகர் பகுதியில் ஆக்கிரமிப்புக்குள்ளாகி அடைப் பட்டுள்ளது. இவை இன்னமும் முழுமையாக அகற்றாததால் தற்போது மழை பெய்தும் தண்ணீர் கண்மாய்க்கு வரவில்லை. மாடக்குளம் கண்மாய் அதன் பாதி கொள்ளளவை தாண்டியுள்ளது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், முத்துப்பட்டி கண்மாய்க்கு தண்ணீரை திறந்து விட வேண்டும் என முத்துப்பட்டி பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.பல ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் இக்கண்மாயில் முழுமையாக நீர்நிரப்ப பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் வரத்து கால்வாய்களை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X