100 நாள் வேலைக்காக 12 கி.மீ., நடக்கும் மக்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

100 நாள் வேலைக்காக 12 கி.மீ., நடக்கும் மக்கள்

Added : அக் 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகங்கை:சிவகங்கை அருகே நுாறு நாள் வேலைத் திட்ட பணிக்காக கிராம மக்கள் 12 கி.மீ., நடக்கின்றனர்.சக்கந்தி ஊராட்சியில் கோமாளிப்பட்டி, தென்னம்பட்டி, அண்ணாநகர், பாசாங்கரை, புதுப்பட்டி, தேவனிப்பட்டி, மானாகுடி, சக்கந்தி, காளமேக்கி உள்ளிட்ட 13 கிராமங்கள் உள்ளன.

நுாறு நாள் வேலைத் திட்டத்தில் தற்போது சக்கந்தி அருகே கால்வாய் சீரமைக்கும் பணி நடக்கிறது.இதில் கோமாளிப்பட்டி, தென்னம்பட்டி, அண்ணாநகரைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் பணி செய்கின்றனர். அவர்கள் தங்களது கிராமங்களில் இருந்து பணி நடக்கும் இடத்திற்கு 12 கி.மீ., நடக்க வேண்டியுள்ளது. இதனால் பலர் வேலைக்கு செல்ல முடியவில்லை. சிலர் இருசக்கர வாகனங்களில் செல்வதால், வாங்கும் சம்பளம் முழுவதும் டீசலுக்கே போவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
கிராமமக்கள் கூறியதாவது: நுாறு வேலைத் திட்டத்தில் ஒரு கி.மீ., க்கும் பணி கொடுக்க வேண்டுமென, விதிமுறை உள்ளது. அதிக துாரத்தில் வேலை கொடுத்தால், வாகனம் ஏற்பாடு செய்ய வேண்டும். எங்கள் கிராமங்களுக்கு அருகிலேயே சின்னகடம்பங்குடி, பெரியகடம்பங்குடி, கருசங்குடி கண்மாய்கள் உள்ளன. அவற்றை சீரமைத்து பல ஆண்டுகளாகிவிட்டது. அங்கு பணி வழங்கினால் சிரமம் இருக்காது, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X