புதிய குற்றச்சாட்டு: ரபேல் நிறுவனம் விளக்கம்| Dinamalar

புதிய குற்றச்சாட்டு: ரபேல் நிறுவனம் விளக்கம்

Added : அக் 11, 2018 | கருத்துகள் (43)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ரபேல், போர் விமானம், பிரான்ஸ், டசால்ட், அனில் அம்பானி, ரிலையன்ஸ்,

புதுடில்லி: ரபேல் போர் விமானம் வாங்க, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட வேண்டியது கட்டாயம் என்ற புதிய குற்றச்சாட்டுக்கு, ரபேல் விமானங்களை தயாரிக்கும் டசால்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

புதிய குற்றச்சாட்டு


பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதில் ஊழல் நடந்துள்ளதாக, காங்., தலைவர் ராகுல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். குறிப்பாக, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக பிரதமர் மோடி செயல்படுகிறார் என்று ராகுல் கூறி வருகிறார்.
இதை, டசால்ட் நிறுவனமும், பிரான்ஸ் அரசும், மத்திய அமைச்சர்களும் மறுத்து வருகின்றனர். இச்சூழ்நிலையில் பிரான்ஸ் நாட்டில் செயல்படும்,'மீடியாபார்ட்' என்ற இணைய தள இதழ் நேற்று புதிய குற்றச்சாட்டை முன் வைத்தது. டசால்ட் நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளன. அதில், ' 36 விமானங்கள் விற்பனைக்கான ஒப்பந்தம் கிடைக்க வேண்டும் என்றால், இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனத்தை பங்குதாரராக சேர்க்க வேண்டும். இது கட்டாயம், கடமையாக்கப்பட்ட ஒன்று' என்று கூறப்பட்டுள்ளதாகவும், அந்த இணைய தள இதழ் செய்தி வெளியிட்டது.

இந்த செய்தி, இந்தியாவில் புது புயலை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் மத்திய அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

டசால்ட் நிறுவனம் விளக்கம்


இப்பிரச்னை குறித்து டசால்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ரபேல் விமானங்கள் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில், 50 சதவீதத்தை இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும். இதற்காக ஒரு நிறுவனத்தை பங்குதாரராக நியமிக்க வேண்டும். இது குறித்து, எங்கள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லோய்க் சிகாயன், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தொழிற்சங்களிடம் மே 11ம் தேதி விளக்கம் அளித்துள்ளார்.
வெளிநாட்டு நிறுவனத்தை பங்குதாராக நியமிப்பது குறித்து தொழிற்சங்கங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்பது பிரான்ஸ் சட்டப்படி கட்டாயம். ஆனால், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் எந்த வித நெருக்கடியும் இல்லாமல் தான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்காக டாசல்ட் - ரிலையன்ஸ் என்ற கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம 2017 ம் ஆண்டு பிப்., 10ம் தேதி உருவாக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்தை தவிர பி.டி.எஸ்.எல்., டெப்சிஸ், கைனடிக், மகிந்திரா, மைனி மற்றும் சாம்டெல் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும், 100 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடுவது குறித்து பேச்சு நடந்து வருகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பத்திரிகையாளர் கருத்து


'லீ மான்டி' என்ற பிரெஞ்ச் நாளிதழின் தெற்கு ஆசிய பத்திரிகையாளர் ஜூலியன் போய்சவ் என்பவர் இப்பிரச்னை குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், பிரான்ஸ் நாட்டில் செயல்படும் நிறுவனங்களின் நிர்வாகம், முக்கிய முடிவுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தொழிற்சங்களுக்கு தெரிக்க வேண்டியது கட்டாயம். அதன்படி, பிரான்ஸ் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்காமல், இந்தியாவில் கட்டப்பட உள்ள தொழிற்சாலை குறித்து தொழிற்சங்கங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கம் பிரான்ஸ் தொழிலாளர் சட்டம் குறித்தது. அதற்கும் அனில் அம்பானிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என, தெரிவித்துள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-அக்-201808:22:29 IST Report Abuse
Srinivasan Kannaiya ரிலையன்ஸ் நிறுவனத்தை தவிர பி.டி.எஸ்.எல்., டெப்சிஸ், கைனடிக், மகிந்திரா, மைனி மற்றும் சாம்டெல் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இப்போதான் இதை சொல்லுகிறீர்கள்...
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
12-அக்-201807:34:57 IST Report Abuse
Suri அணில் அம்பானியின் நிறுவனம் ஒரு யோக்கியமான, சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எந்த விதமான முறைகேடுகளில் சிக்காமல், வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பி கொடுத்து, defaulter லிஸ்டில் இல்லாத நிறுவனம் என்று இங்கு அவர்களுக்கு ஆதரவாக கூக்குரலிடும் எந்த ஒரு நபரும் ஒப்புக்கொள்வார்களா? அப்படிப்பட்ட கேவலமான பின்புலம் உள்ள ஒரு நிறுவனம் கம்பெனி ஆரம்பித்த சில நாட்களிலேயே இவ்வவளவு பெரிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஒப்பந்தத்தை யாரின் அழுத்தத்தின் பேரில் வழங்கினார்கள்? இந்த நிறுவனம் பீ ஜெ பீ க்கு எத்தனை கோடி கட்சி நிதி கொடுத்திருக்கிறார்கள்? எதற்க்காக பீ ஜெ பீ கட்சிகளின் தேர்தல் நிதியை வரைமுறைப்படுத்தும் சட்டத்தை இந்த கால கட்டத்தில் ஏன் மாற்றினார்கள்? ஏன் தனிப்பட்ட மற்றும் நிறுவனங்கள் வழங்கும் தேர்தல் நிதி உச்சவரம்பை இதே கால கட்டத்தில் தளர்த்தினார்கள்? இவையெல்லாம் கேட்டால் உடனே ஆன்டி-நேஷனல் முத்திரை குத்துவார்கள். வசை பாடுவார்கள், நாகரீகமில்லாமல். இதே கால கட்டத்தில் தான் பீ ஜெ பீ கட்சிக்கு நாட்டிலேயே அதிக கட்சி நிதி கிடைத்தது. மோடி பணம் தனக்காக வாங்கவில்லை என்றால் கட்சிக்காக வாங்கினாலும் குற்றமே. பின் அவரை உத்தமர் என்று தூக்கி பிடிப்பதை நிறுத்துங்கள். அவர் எதோ நாட்டை காக்க வந்த தெய்வம் போல ஒரு போலி சித்தரிப்பு. இதை தான் சகிக்க முடியவில்லை. பீ ஜெ பீ ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி கிடையாது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் ஊழல் கட்சி என்றால் அதே தராசில் பீ ஜெ பீ ஒன்றும் குறைந்தது இல்லை. என்ன வித்தியாசம் அங்கு தனிப்பட்டவர்கள் பயனடைவார்கள் இங்கு கட்சியும் பலனடையும். இதை போன்ற சட்ட வரைமுறைகளை தளர்த்தினால் ,ஊழலை எதிர்ப்போம் என்று கூக்குரல் இடுவதில் பயன் இல்லை . லோகபால் என்ன நிலைமையில் உள்ளது? ஆட்சி முடியப்போகிறது. என்ன செய்தார்கள் அந்த லோக்பால் நடைமுறைப்படுத்துவதில்? ஏன் நடைமுறைப்படுத்தவில்லை? ஏனென்றால் இப்படி rafale போன்ற விவகாரத்தில் அவர்கள் விழி பிதுங்கிவிடும் என்பதனால், அவர்களின் சாயமும் வெளுத்துவிடும் என்பதால். இந்த நாடு உருப்படவே படாது, இப்படிப்பட்ட போலி அசாமிகளாலும் , தனிப்பட்ட சுயவிளம்பர பிரியர்களாலும். இதில் இந்த நிர்மலா இப்பொழுது என்ன காரணத்துக்காக பிரான்ஸ் செல்கிறார்? அதிலேயே தெரியவில்லையா அவர்கள் நிலைமை. அனைத்தையும் சரிக்கட்டவும் , damage control செய்யவும் செல்கிறார். அசிங்கம் பிடித்தவர்கள். அனைத்துக்கும் பதில் சொல்லும் காலம் வரும். தலை விதி மாற்றும் சரியில்லை.
Rate this:
Share this comment
Cancel
Thulasingam Jayaram Pillai - Chennai,இந்தியா
12-அக்-201806:58:30 IST Report Abuse
Thulasingam Jayaram Pillai அப்பாடா, பெருங் கூலிபடையே அமர்த்தியுள்ளார் மோடி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள என்பது தெளிவாகிறது விமானம் வாங்கியது தவறில்லை, அதனை மூன்று மடங்காக விலை உயர்த்தி, தனியாரை உள்புகுத்தி வாங்க வேண்டிய கட்டாயம் மோடிக்கு எதனால் ஏற்பட்டது என்று இந்த மோடியின் கூலிப் படை உணருமா? உணர்ந்தால் அதை இங்கே தெரிவிக்குமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X