தீபாவளிக்கு 20,567 சிறப்பு பஸ்கள் இயக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளிக்கு 20,567 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Updated : அக் 11, 2018 | Added : அக் 11, 2018 | கருத்துகள் (5)
தீபாவளி, சிறப்பு பஸ்கள், விஜயபாஸ்கர்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவ.,3,4,5 தேதிகளில் 20,567 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னையில் இருந்து 11,367 பஸ்களும், பிற மாவட்டங்களில் இருந்து 9,200 பஸ்களும் இயக்கப்படும். முன்பதிவு நவ.,1 முதல் துவங்கும். கோயம்பேட்டில் 26 முன்பதிவு மையங்கள் செயல்படும். தாம்பரம்,கே.கே.நகர், கோயம்பேடு பகுதிகளில் இருந்து பஸ்கள் கிளம்பும்.

ஆந்திரா மார்க்கம் செல்லும் பஸ்கள் மாதவரத்தில் இருந்தும், புதுச்சேரி மார்க்கமாக செல்லும் பஸ்கள் சைதாப்பேட்டையில் இருந்தும், தென் மாவட்டங்கள் செல்லும் பஸ்கள் கோயம்பேட்டில் இருந்தும் கிளம்பும். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இரண்டு இடங்களில் இருந்து பஸ்கள் கிளம்பும். பண்டிகை முடிந்து ஊர் திரும்ப 12 ஆயிரம் பஸகள் இயக்கப்படும்.
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X