ராகுல் சொல்வது பொய்; பா.ஜ.,| Dinamalar

ராகுல் சொல்வது பொய்; பா.ஜ.,

Updated : அக் 11, 2018 | Added : அக் 11, 2018 | கருத்துகள் (5)
 ராகுல், பொய், பா.ஜ.,B.J.P,BJP,Bharatiya Janata Party,Congress

புதுடில்லி: ரபேல் போர் விமானம் விவகாரம் தொடர்பாக காங்., தலைவர் ராகுல் நாட்டு மக்களுக்கு பொய்யான தகவலை தெரிவிக்கிறார் என பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
ரபேல் தொடர்பாக அனைத்து விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், மேலோட்டமாகவே ராகுல் பேசி வருகிறார். அவரிடம் உரிய ஆவணங்கள் இருந்திருந்தால் கோர்ட்டுக்கு செல்ல வேண்டியது தானே ? ரபேல் குறித்து பேச ராகுலுக்கு அருகதை கிடையாது. அவரது தந்தை போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் தரகராக இருந்தவர். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தை ராகுல் கேலி செய்கிறார். நாட்டு மக்களுக்கு தவறான தகவலை தருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X