இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 இதே நாளில் அன்று


அக்டோபர் 12, 1891

தமிழறிஞர், ச.வையாபுரிப் பிள்ளை: நெல்லை மாவட்டம், சிக்கநரசய்யன்பேட்டை என்ற ஊரில், சரவணப்பெருமாள் - - பாப்பம்மாள் தம்பதிக்கு மகனாக, 1891- அக்., 12-ல் பிறந்தார். வழக்கறிஞரான, இவர் எழுதி வெளி வந்த, பல கட்டுரைகள், இலக்கிய ஆய்வுகள், அறிஞர்கள் மத்தியில் பேசப்பட வைத்துள்ளன. உ.வே.சாமிநாதய்யருக்கு பின், பழந்தமிழ் இலக்கியங்களை தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்ட பெருமை இவரையே சாரும்.

சென்னை பல்கலை, 1926ல் உருவாக்கி வந்த, தமிழ் அகராதியின் பதிப்பாசிரியர் பொறுப்பேற்றார். சென்னை பல்கலை, தமிழ் ஆராய்ச்சி துறைத் தலைவர் மற்றும் திருவிதாங்கூர் பல்கலை தமிழ்த் துறைத் தலைவர் போன்ற பதவிகளை வகித்தவர்.

சென்னை பல்கலை வெளியிட்ட, பேரகராதியின் ஆக்க குழுத் தலைவராகவும், தமிழ் நுாற்பதிப்பு துறையில் சிறந்த பதிப்பாசிரியராகவும் இருந்தார். ஆய்வுக் கட்டுரையாளர், திறனாய்வாளர் என, பன்முகம் கொண்ட, வையாபுரிப் பிள்ளை, 1956 பிப்., 17ல் காலமானார். அவர் பிறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X