'120 கோடி பேருக்கு டிஜிட்டல் அடையாளம்' Dinamalar
பதிவு செய்த நாள் :
'120 கோடி பேருக்கு
டிஜிட்டல் அடையாளம்'

புதுடில்லி : ''நாட்டில், 120 கோடி மக்களுக்கு, ஆதார் எண் மூலம், டிஜிட்டல் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது,'' என, பிரதமர் மோடி கூறினார்.

120 கோடி பேர்,டிஜிட்டல்,அடையாளம்,பிரதமர்,மோடி


டில்லியில் நேற்று, நான்காவது தொழில் புரட்சிக்கான மையத்தை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: உலகில், முதல் மற்றும் இரண்டாவது தொழில் புரட்சி ஏற்பட்ட போது, இந்தியா சுதந்திரம் பெறவில்லை.

மூன்றாவது தொழில் புரட்சி ஏற்பட்ட காலத்தில், சுதந்திரம் பெற்று, கடும் சவால்களை, நாடு சந்திக்க வேண்டியிருந்தது.

ஆனால், நான்காவது தொழில் புரட்சி, இந்தியாவுக்கான காலமாக மாறியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியால், வேலை வாய்ப்புகள் குறைந்துவிடுமோ என, யாரும் பயப்பட தேவையில்லை. நான்காவது தொழில் புரட்சி அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும். நம் ஒற்றுமை, மக்கள் தொகையின் பலம், வளர்ச்சியடைந்து வரும் சந்தைகள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதி ஆகியவை, ஆராய்ச்சிக்கான சர்வதேச மையமாக, இந்தியாவை மாற்றும்.

அமெரிக்கா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் மட்டுமே, இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. தற்போது, நம் நாட்டிலும், இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டம்,

Advertisement

பெரும் வெற்றி பெற்றுள்ளதுடன், மக்களின் வாழ்க்கை தரத்தையும் மாற்றியுள்ளது.

நாட்டில் உள்ள, 120 கோடி மக்களுக்கு, ஆதார் அட்டை மூலம், டிஜிட்டல் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது. அலைபேசி இணையதள சேவை பயன்பாட்டில், உலகில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாட்டில், ௫௦ சதவீதம் பேர், அலைபேசி வைத்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (19+ 29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-அக்-201817:54:23 IST Report Abuse

Malick Rajaமோடி அரசாங்கம் இறங்குவதற்கு முன்பாக பெட்ரோல் ரூ 100.00 ஐ தாண்டும் . டாலர் விலை ரூ 100.00 க்கு வரும் அப்போது 100% டிஜிட்டல் இந்தியா என்று கூட சொல்வார்கள்

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
13-அக்-201813:29:05 IST Report Abuse

இந்தியன் kumarமோடிஜியின் வெற்றியை லோக்சபா தேர்தல் முடிவு மூலம் அறிந்து கொள்ளலாம்.

Rate this:
Sahayam - cHENNAI,இந்தியா
12-அக்-201823:26:33 IST Report Abuse

Sahayamஇதற்க்கு என்ன விலை கொடுத்து உள்ளீர்கள் மோடிஜி . காலம் பதில் சொல்லும்

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X