சிதம்பரம் மகன் சொத்துகள்; அமலாக்கத்துறை அதிரடி Dinamalar
பதிவு செய்த நாள் :
பண மோசடி வழக்கில்
கார்த்தியின் ரூ.54 கோடி சொத்து முடக்கம்

புதுடில்லி : ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், அன்னிய முதலீடு செய்வதில் நடந்த பண மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கு சொந்தமான, 54 கோடி ரூபாய் சொத்துக்களை, அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

சிதம்பரம்,மகன்,கார்த்தி,சொத்துகள்,அமலாக்கத்துறை,அதிரடி


காங்கிரஸ் மூத்த தலைவரான சிதம்பரம், கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது, மத்திய நிதி அமைச்சராக

இருந்தார். கடந்த, 2007ல், ஐ.என்.எக்ஸ்., மீடியா என்ற நிறுவனம், வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதில், மோசடிகள் செய்ததாக, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி, முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், கார்த்திக்கு சொந்தமான, 54 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி, அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து, சமூக வலைதளத்தில் கார்த்தி கூறியதாவது: சட்டத்தின் அடிப்படையில் இல்லாமல், பழிவாங்கும் நோக்கத்துடன், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலைப்பு செய்தியாக வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதை எதிர்த்து வழக்கு தொடருவேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Advertisement

கொடைக்கானல் :

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கு சொந்தமாக கொடைக்கானலில் உள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கினர். கொடைக்கானல் நாயுடுபுரம், அட்டுவம்பட்டியில் உள்ள வீடுகள், 3 ஏக்கர் விவசாய நிலங்கள் முடக்கப்பட்டன. அரசு வழிகாட்டி மதிப்பு 25 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
12-அக்-201813:52:47 IST Report Abuse

Sivaகுனிந்து நிமிர கூட முடியாத ஒருவர் எப்படி இத்தணை கோடி வைத்துள்ளார்.. ஒரு வேளை தாத்தா சொத்து என்றால் எப்படி வந்தது என்று யாரும் கேட்க மாட்டார்கள் என்று நம்பிக்கையா.... அப்பன் சொத்து என்றால் உனக்கு எப்படி சேரும்... மக்கள் தலைவர் என்று சொல்லி வாழ்க்கை நடத்தி வருகிறீர். ஆகவே தான் இந்த கேள்வி...

Rate this:
Manian - Chennai,இந்தியா
12-அக்-201822:25:07 IST Report Abuse

Manianஅடுத்த எல்கைக்ஷனிலே தமிழ் நாட்டிலிருந்து முதல்வராகணும் நைனா சொன்னாரு. அதுக்கு காசு சேத்து தப்பிதமா? வேலை செய்யாம லஞ்சமே வாங்கி குந்தி இருக்கும் அரசாங்க வியாதிகள் செய்யததையா நான் செய்தேன்? எத்தினி வாடி வெளி நாடு போயி முதலீடு செய்தேன் கருணா ஹவாலா மூலம்(அனுமார் மூலம்) செய்தரு, இதிலே நானே செய்தேன். அப்பிள்ளை அமெரிக்க பிரஜை ஆகணும்னா அதுக்கு பல கோடி முதலீடு வேணுமே. அதெல்லாம் நாணிவுக்கு மக்கள் கொடுத்த பரிசுக்குனு எண்ணி பாருங்க. எவ்ளோ பெருமையா இருக்கு ஆங்கிலேயர்கள் கொள்ளை அடித்த பொது யார் எதிர்த்தார்கள்? முகலாயர்கள் கோவில் நகைகளை எடுத்து சென்ற பொது அதை யார் தடுத்தார்கள்?. வெறும் காழ்புணர்ச்சியால் ஒரு சிலர் உளறுவதை நாம் ஏன் பதில் கொடுத்து அவர்களை துன்பத்திற்கு உள்ளாக்கவேண்டும். - கார்த்தி சிதம்பரம் நண்பருடன் போனில் பேசியதை ஒட்டுகேடடா ஒட்டுகேடட மாறன் ....

Rate this:
Varun Ramesh - Chennai,இந்தியா
12-அக்-201813:50:20 IST Report Abuse

Varun Rameshகார்த்தி சிதம்பரம் படித்தவர், நீண்டகாலம் மத்திய அமைச்சராக இருந்தவரின் வாரிசு. தாயார் பொறுப்புள்ள வழக்குரைஞர். இதன்காரணமாக நேர்மையானவர். சட்டத்தை மதிப்பவர். தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என நீதிமன்றத்தில் நிரூபித்து புடம் போட்ட தங்கமாக மீண்டு varuvaar என்று எதிர்பார்க்கலாமா ஆ ஆ ஆ . . . . . . . . ? ? ? ? ? ? ?

Rate this:
Devanand Louis - Bangalore,இந்தியா
12-அக்-201813:19:51 IST Report Abuse

Devanand Louisஇவனது சொத்துக்களெலாம் 500 கோடியை தாண்டும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் வெறும் 50 கோடியென்று கைப்பற்றியுளார்கள். இவனை விரைவில் திஹார் சிறையில் அடைக்கவேண்டுமென்பது மக்களின் வேண்டுகோள், இவனது அப்பனையும் சேர்த்து .இவனது அம்மாவும் பெரிய கொள்ளைக்காரி , குடும்பமே மறைந்த விஞ்சான ஊழல்வாதி கருணாநிதியை விட மிக பெரிய கொள்ளைக்காரர்கள்

Rate this:
Manian - Chennai,இந்தியா
13-அக்-201806:25:29 IST Report Abuse

Manianஇவர்கள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அறிந்துள்ள சட்ட விஞ்சான திருடர்கள். இவர்கள் ஹவாலா இல்லமே, பல தடவை கார்த்திக் மடியில் கட்டிகொன்டு போன டாலரால் முதலீடு செய்தார். இவர்கள் பொருளாதார விஞ்சான திருடர்கள் என்று குறை சர்க்காரியா கமிட்டி இல்லை என்பதே சிறப்பு....

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X