'அ.தி.மு.க., உறுப்பினராக சசிகலா இல்லை' Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'அ.தி.மு.க., உறுப்பினராக சசிகலா இல்லை'

சென்னை : ''அ.தி.மு.க.,வில், சசிகலா உறுப்பினராக இல்லை,'' என, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், பழனிசாமி ஆகியோர் தெரிவித்தனர்.

அதிமுக,உறுப்பினர்,சசி,சசிகலா,இல்லை,ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், பழனிசாமி


அ.தி.மு.க.,வில் சேர்ந்தவர்களுக்கு, உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் உள்ள, கட்சியின் தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரான, பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், பழனிசாமிக்கு, உறுப்பினர் அட்டையை வழங்கினார். பன்னீர்செல்வத்திற்கு, பழனிசாமி உறுப்பினர் அட்டை வழங்கினார். பின், நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு பின், ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், பழனிசாமி இருவரும் அளித்த பேட்டி: ஜெயலலிதா காலத்தில், ஐந்து ஆண்டுகளில்,

31 லட்சம் இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறையினர் உட்பட, 1.50 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறையில் இருந்தவர்களுக்கு வயதாகி விட்டது. எனவே, புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட உள்ளனர். அதன்பின், உறுப்பினர்கள் எண்ணிக்கை, இரண்டு கோடியை தாண்டும்.

தேவைப்படும் போது, வழிகாட்டி குழு அமைக்கப்படும். அ.தி.மு.க., எங்களிடம் உள்ளது; தொண்டர்கள் எங்களிடம் உள்ளனர்; பொதுமக்கள், எங்களுக்கு ஆதரவு தருகின்றனர். தினகரன் தனி கட்சி துவக்கி உள்ளார். அவருக்கும் எங்களுக்கும், எந்த சம்பந்தமும் கிடையாது.

ஏற்கனவே, பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சசிகலா நீக்கப்பட்டுள்ளார். அவர், அடிப்படை உறுப்பினராக இல்லை. புதிய உறுப்பினர்களை சேர்க்கும் போது, சசிகலா உறுப்பினராக சேர்க்கப்படவில்லை. எனவே, அவர் கட்சியில் இல்லை.

கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தினகரனுக்கு ஆதரவாக உள்ள, எம்.எல்.ஏ.,க்கள் பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

'1.10 கோடி உறுப்பினர்கள்'

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த, உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம் பேசியதாவது:கட்சியில், மார்ச், 1 முதல், மே, 31க்குள், உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கவும், புதிய உறுப்பினர்கள் சேரவும் படிவம் அளித்த, 60 லட்சம் பேருக்கு, புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. மே, 31க்குப்பின், உறுப்பினர் சேர்ப்பு படிவம் வழங்கியோருக்கு, உறுப்பினர் அட்டை அச்சிடப்பட்டு, பின்னர் வழங்கப்படும். தமிழகத்தில், 1.09 கோடி பேர்; பிற மாநிலங்களிலிருந்து, 88 ஆயிரத்து, 575 பேர் என, மொத்தம், 1.10 கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இது, 90 நாட்களில் நிகழ்த்தப்பட்ட, வரலாற்று சாதனை.இவ்வாறு அவர் பேசினார். இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசுகையில், ''குறுகிய காலத்தில், 1.10 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இன்னும், ஆறு மாதங்களில், 50 லட்சம் உறுப்பினர்கள் சேருவர். ஜெ., இருந்தபோது, 1.50 கோடி உறுப்பினர்கள் இருந்தனர்; அதைவிட, கூடுதல் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவர்,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
14-அக்-201812:43:29 IST Report Abuse

meenakshisundaramஇதை கூட நம் தமிழ் முட்டாள்களுக்கு சொல்லி தொலைக்க வேண்டியுள்ளது.

Rate this:
skv - Bangalore,இந்தியா
12-அக்-201815:06:46 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>இதுவேதான் நான் ஆரம்பாமலேந்து சொல்லினேனே இருக்கேன் அவள் அடிப்படிமெம்பருமே இல்லீங்க எப்படி கட்சிக்கு தலைவி ஆகலாம் பலகாலமா அதிமுகளே அடிப்படை உறுப்பினரா இருக்கும் ஆப்ஸ் தான் ஐயாவாள் தேர்வு செயப்பட்ட முதல்வர் ஆனால் இந்த எக்ஸ் தான் சசிகால்லேயே வீழ்ந்து சேவிச்சு குர்ஸிக்குவந்தாக அவர் சி எம் ஆகவே முடியாது சசிபின்னாலே தொங்கினதாலேயே 18 PERUKKU ஆப்பு வச்சு து கண்டவன் பினங்ளே போனால் அதுதான் கதி , முக போனாக சுடாலின் தன்னை தானே தலைவன் என்று சொல்லிட்டு இருக்காங்க இதவாச்சும் சித்த ஓகே (திமுக மக்கள்கட்சி என்பது உண்மையானால் செல்லாது வேறு ஆளுதான் தலைமைக்கு வரணும் முக காட்ச்சியின்ன் பெரு வச்சு கொள்ளை அடிச்சாங்க ஆனால் எதுலேயும் தான் மாட்டாமல் சேர்த்தவைகளெல்லாம் தனக்கே என்று தான் சுடாலின் பிளான் பண்ணுறாங்க அதான் அழகிரி லபோதிபோன்னு குதிக்கிறார் பலகோடி ஆச்சுதே) அதே போல ஜெயாவின் பேரை சொல்லியே இந்தபொம்பளே கொடியே சேர்த்துட்டா அந்தம்மாக்கு தெரியாமலே தெரிஞ்சு தான் அவங்க இதுகளை கூண்டோடு வெரட்டினாக ஆனால் இவை தான் மட்டும் வந்து மன்னிப்பு கேட்டுட்டு ராமையா நுழைஞ்சுட்டா அந்தம்மா அப்போலோ அட்மிட் பண்ணா உடனே மன்னார்குடியே போயசுலே பூந்து அடிச்சு து கொள்ளை என்பதுதான் உண்மை இப்போ என்னடான்னா மீண்டும் துள்ளிண்டுருக்கா

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-அக்-201822:37:40 IST Report Abuse

தமிழ்வேல் நாட்டுப் பாசம் இருந்தால், அந்தம்மா இதை ஜெயிலுக்குள்ளே அனுப்பி இருக்கனும் ? // அந்தம்மாக்கு தெரியாமலே தெரிஞ்சு தான் அவங்க இதுகளை கூண்டோடு வெரட்டினாக ஆனால் இவை தான் மட்டும் வந்து மன்னிப்பு கேட்டுட்டு ராமையா நுழைஞ்சுட்டா //...

Rate this:
POPCORN - Chennai ,இந்தியா
12-அக்-201813:41:42 IST Report Abuse

POPCORNபின் எதற்கு அவர் காலில் விழ வேண்டும் ( குரு முர்த்தி இவர்களுக்கு பட்டம் கொடுத்துள்ளார்)

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X