"It's For The Gentleman To Speak": Smriti Irani On MJ Akbar, #MeToo | அக்பர் மீதான குற்றச்சாட்டு: ஸ்மிருதி கருத்து| Dinamalar

அக்பர் மீதான குற்றச்சாட்டு: ஸ்மிருதி கருத்து

Added : அக் 12, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 அக்பர் மீதான குற்றச்சாட்டு: ஸ்மிருதி கருத்து

மும்பை:எம்.ஜே. அக்பர் மீதான பாலியல் புகார் குறித்து அவர் தான் மவுனம் கலைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை போன்று தற்போது இந்தியாவி்ல #மீ டூ பிரச்சாரம் பரவலாகி வருகிறது. மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பிரியா ரமணி மற்றும் மற்றொரு பெண் பத்திரிகையாளர் ஆகியோர் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இது மத்திய அரசுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பெண் அமைச்சர்களான சுஷ்மா சுவராஜ், மேனகா, நிர்மலா சித்தாராமன் ஆகியோர் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.இந்தக் குற்றச்சாட்டு குறித்து , மற்றொரு பெண் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மும்பையில் கூறியது, பாலியல் குற்றச்சாட்டு குறித்து அக்பர் தான் பதில் அளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். ஆதலால், நான் இதில் கருத்து கூற இயலாது. ஏனென்றால், சம்பவம் நடந்த போது நான் இல்லை. அதே சமயம் புகார் அளிக்கும் பெண்களையும் எடைபோட்டு விடாதீர்கள். அவர்கள் பல விஷயங்களைக் கடந்து இவ்வாறு பேசுகிறார்கள்'' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-அக்-201808:51:10 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ இது மத்திய அரசுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. //// சீப்பு சீப்பா வருதுங்கோ ...... ஒரு நெருக்கடியும் அரசுக்கோ, கச்சிக்கோ இல்லீங்கோ ...... நெருக்கடி எல்லாம் அப்பாவி பொதுஜனத்துக்குத்தானுங்கோ ...... ஹி ..... ஹி ..... ஹி ...... பாலியல் இல்லாமே அரசியலே இல்லீங்கோ ......
Rate this:
Share this comment
கதரவுடும் பிஜேபியை வெறுப்போர் சங்கம் - பாவப்பட்ட மக்கள் தெரு, டாலர் டவுன் நகர்,பெட்ரோல் விலை ஏற்ற மாவட்டம்,நொடிந்தவூர்,இந்தியா
15-அக்-201808:29:23 IST Report Abuse
கதரவுடும் பிஜேபியை வெறுப்போர் சங்கம் இதுக்குதா பாலியல் ஜல்சா பார்ட்டி என்று பொது மக்கள் பெயரே வைத்து விட்டார்களே...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-அக்-201808:28:34 IST Report Abuse
Srinivasan Kannaiya பெண்கள் இந்நிலையில் யாரை வேண்டும் என்றாலும் பழிவாங்கலாம்...
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
12-அக்-201802:16:25 IST Report Abuse
Mani . V ஸ்மிர்தி இரானி மேடம் "அதே சமயம் புகார் அளிக்கும் பெண்களையும் எடைபோட்டு விடாதீர்கள்" என்று கூறியுள்ளதை பார்த்தால் கொஞ்ச காலம் முன்பு அவர்கள் கட்சி பிரமுகர் (இன்னுமே போலீஸால் பிடிக்க முடியாமல், ஆனால் அவர்களாலேயே பாதுகாக்கப்படும், த.செ வுக்கு வேண்டியவர்) "பெரிய பதவிக்கு வர வேண்டுமானால் அனுசரித்துதான் போக வேண்டும்" என்று சொன்னது உண்மையாக இருக்குமோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X