கண்காணிப்பு:கடலுார் பீச்சில் சி.சி.டி.வி., கேமரா மூலம்:குற்றம் குறைய ஏற்பாடு | Dinamalar

தமிழ்நாடு

கண்காணிப்பு:கடலுார் பீச்சில் சி.சி.டி.வி., கேமரா மூலம்:குற்றம் குறைய ஏற்பாடு

Updated : அக் 12, 2018 | Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 கண்காணிப்பு:கடலுார் பீச்சில்  சி.சி.டி.வி., கேமரா மூலம்:குற்றம் குறைய ஏற்பாடு

கடலுார்:கடலுார் சில்வர் பீச்சில் போலீசார் கண்காணிப்பு கேமராவை பொருத்தியுள்ளனர்.கடலுார் நகர போலீசார் சார்பில் முக்கிய சிக்னல் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் சார்பில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நகரின் முக்கிய பகுதிகளில் நடக்கும் குற்றங்களை கண்டுபிடிக்க வசதியாக இருந்து வருகிறது.இதன்படி கடலுார் சில்வர் பீச்சில் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். அதிகளவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. மேலும் கல்லுாரி உள்ளதால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து செல்கின்றனர்.இதைத்தொடர்ந்து கடலுார் சில்வர் பீச்சில் நான்கு இடங்களில் சி.சி.டி.வி.,கேமரா பொருத்தப்பட்டு, கண்காணிப்பு பணியை கடலுார் இன்ஸ்பெக்டர் சரவணன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தேவனாம்பட்டினம் சப்இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X