மின் விபத்தில் பிழைத்த 14 வயது சிறுவன் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் விபத்தில் பிழைத்த 14 வயது சிறுவன்

Added : அக் 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 மின் விபத்தில் பிழைத்த 14 வயது சிறுவன்

விருத்தாசலம்:மும்பையில் நடந்த மின் விபத்தில் படுகாயமடைந்த, விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த, 14 வயது சிறுவன், இரண்டு மாத தொடர் சிகிச்சையில், உயிர் பிழைத்துள்ளார். ஆயினும், சிகிச்சையை தொடர, பொருளாதார வசதியின்றி, பெற்றோர் தவிக்கின்றனர்.


படுகாயம்



கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோவிலானுாரைச் சேர்ந்தவர்கள் முத்தையன் - சரஸ்வதி தம்பதி; தனியார் பள்ளி ஆசிரியர்கள். மகன் கிருபாநி, 14, ஏழாம் வகுப்பு படித்த நிலையில், மே கோடை விடுமுறையில், மும்பையில் உள்ள தாய்மாமன் வீட்டிற்கு சென்றிருந்தார்.அங்கு, அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாம் தளத்தில் விளையாடியபோது, எதிர்பாராத விதமாக உயர் மின்னழுத்த கம்பியில் சிக்கி, படுகாய மடைந்தார்.
60 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய கிருபாநி, மும்பை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிழைக்க மாட்டார் என கருதப்பட்ட நிலையில், அங்குள்ள, 'மசினா' என்ற தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.பல லட்சம் ரூபாய் செலவில், 55 நாட்கள் தொடர் சிகிச்சையில், உயிர் பிழைத்த சிறுவன், தற்போது, தாய்மாமன் வீட்டில் தங்கி, வாராந்திர சிகிச்சையை தொடர்கிறார். ஏழ்மை நிலையில் உள்ள முத்தையன், ஒரே மகனுக்காக நண்பர்கள், உறவினர்கள் உட்பட பலரிடம் கடன் வாங்கி, மருத்துவ செலவுகளை மேற்கொண்டு வருகிறார்.


கடன்



முத்தையன் கூறியதாவது:தனியார் பள்ளியில் நானும், மனைவியும் குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறோம். என் சக்திக்கு மீறி, 16 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவழித்து, மகனை மீட்டது மகிழ்ச்சியளிக்கிறது.இருப்பினும், வாராந்திர சிகிச்சை, சிறப்பு உணவு வகைகளுக்கு செலவு செய்ய முடியாமல் தவிக்கிறோம்.
பலத்த தீக்காயம் என்பதால், காற்றில் தீக்காயம் வெடித்து, மீண்டும் காயமாவதால், அதற்கென, 72 ஆயிரம் ரூபாயில் உள்ள உடையை அணிய வேண்டும் என, மருத்துவர்கள் கூறி உள்ளனர்.சொத்துக்களோ, போதிய வருவாய் ஆதாரமோ இல்லாத நிலையில், நண்பர்கள், உறவினர்கள் உட்பட பலரிடம் கடன் பெற்று, மருத்துவ செலவுகளை செய்துள்ளேன். இன்னும், இரண்டு ஆண்டுகளுக்கு சிகிச்சையை தொடர வேண்டி உள்ளது.
மகனை கவனித்துக் கொள்ள, மனைவியும் மும்பை சென்று விட்டதால், என் வருமானத்தில், மருத்துவ செலவுகளை கவனிக்க முடியவில்லை. நல்உள்ளம் படைத்த நபர்கள், உதவி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

உதவ விரும்புவோர், முத்தையனின், 9994713618 மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-அக்-201808:49:58 IST Report Abuse
Srinivasan Kannaiya இதயமுள்ளவர்கள் உதவுவார்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X