ஊழல் விசாரணை: அன்புமணி வலியுறுத்தல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊழல் விசாரணை: அன்புமணி வலியுறுத்தல்

Added : அக் 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:'நிலக்கரி மற்றும் மின்சாரம் கொள்முதல் உட்பட, அனைத்து துறை ஊழல்கள் குறித்தும், விசாரணை நடத்த வேண்டும்' என, பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி வலியுறுத்திஉள்ளார்.
அவரது அறிக்கை:தமிழக அனல் மின் நிலையங்களில், நிலக்கரி இருப்பு மிகவும் குறைவாக இருப்பதை காரணம் காட்டி, வெளிநாடுகளில் இருந்து, விதிகளை தளர்த்தி, நிலக்கரி இறக்குமதி செய்ததில், ஊழல் நடைபெற்றுள்ளது. ஒப்பந்தப்புள்ளி கோராமல், அதிக விலைக்கு நிலக்கரி வாங்கப்பட்டதாக, அரசு தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது.
தமிழக மின்சார வாரியத்திற்கு, மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதிலும், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. தமிழகத்தில், ஊழல் நடக்காத துறையே இல்லை என கூறும் அளவிற்கு, அனைத்து துறைகளிலும் ஊழல்கள் மலிந்து கிடக்கின்றன. இது குறித்தும், விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு, அன்புமணி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
12-அக்-201822:57:04 IST Report Abuse
samuelmuthiahraj அரசு இடங்களை குறிப்பாக சாலைகள் மற்றும் பொது இடங்களை ஆக்கிரமிப்பு செய்வது ஊழல் இல்லையா அதை உங்கள் கட்சி பிரமுகர் காஞ்சிபுரத்தில் பயங்கரமாக செய்வதை ஏன் நீங்கள் கண்டுகொள்ளுவதே இல்லை உங்கள் கட்சியின் நற்பெயருக்கு இப்படி களங்கம் ஏற்படுவதை நீங்கள் தடை செய்தால் தமிழகத்தில் நடைபெறும் தவறுகள் இல்லாமல் இருக்க உங்கள் தலைமையில் ஆட்சி ஏற்படவாய்ப்புண்டு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X