நிலக்கரி இறக்குமதி ஸ்டாலின் கண்டனம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிலக்கரி இறக்குமதி ஸ்டாலின் கண்டனம்

Added : அக் 12, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 நிலக்கரி இறக்குமதி ஸ்டாலின் கண்டனம்

சென்னை,:டெண்டர் விதிகளை தளர்த்தி, முறைகேடுகள் வாயிலாக, 1.10 லட்சம் டன் நிலக்கரி வாங்குவதை, அ.தி.மு.க., அரசு கைவிட வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
மத்திய அரசின், 'கோல் இந்தியா' நிறுவனத்திடமிருந்து, ஒரு டன் நிலக்கரி, 2,000 ரூபாய்க்கு வாங்கும் நிலையில், அதிக விலை கொடுத்து, 'அதானி' உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடம் இருந்து, நிலக்கரி வாங்குவது, அரசின் கையாலாகாத்தனமாக தெரிகிறது.அதானி கம்பெனிகள், ஏற்கெனவே, தமிழக மின் வாரியத்திற்கு, தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து கொடுத்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த கம்பெனிகள் மீது, மத்திய வருவாய் புலனாய்வு துறை விசாரணை நடத்துகிறது.
மீண்டும், அதே கம்பெனியிடமிருந்து, நிலக்கரி வாங்குவது ஏன்?தமிழக மின் பகிர்மான கழக தலைவரும், அரசின் மின் துறை செயலரும், எப்படி டெண்டர் இல்லாமல், நிலக்கரி வாங்க ஒப்புக்கொண்டனர் என, பல்வேறு கேள்விகள் வரிசையில் நிற்கின்றன. டெண்டர் விதிகளை தளர்த்தி, முறைகேடுகள் வாயிலாக, 1.10 லட்சம் டன் நிலக்கரி வாங்குவதை, அ.தி.மு.க., அரசு, உடனே கைவிட வேண்டும்.நிலக்கரி தேவை என்றால், வெளிப்படையான டெண்டர் வாயிலாக கொள்முதல் செய்ய வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
12-அக்-201823:01:04 IST Report Abuse
samuelmuthiahraj எல்லா தவறுகளையும் சொல்லுகிறீர்கள் ஆனால் காஞ்சிபுரத்தில் நடந்து வரும் ஆக்கிரமிப்புகள் பற்றி மட்டும் எதுவும் உங்கள் தரப்பிடம் வராததால் மர்மம் என்ன மாமல்லன் நகர் மகேந்திரபல்லவன் தெருவில் குப்பைகள் சாக்கடைகள் நகராட்சியே ஆக்கிரமிப்பு செய்து கொண்டும் அரசியல் பிரமுகர் ஒருவர் சாலை மற்றும் பொதுஇடம் ஆக்கிரமிப்பும் செய்துவருகிறார் ஏன் அது பற்றியெல்லாம் விஷயம் வெளி வருவதில்லை
Rate this:
Share this comment
Cancel
Devanand Louis - Bangalore,இந்தியா
12-அக்-201818:23:25 IST Report Abuse
Devanand Louis ஸ்டாலின் நீங்கள் , ஊழலைப்பற்றி பேச உமக்கு அருகதை இருக்கா ?? என்று சற்று யோசிக்கவேண்டும் ஸ்டாலின் ??
Rate this:
Share this comment
Cancel
Devanand Louis - Bangalore,இந்தியா
12-அக்-201818:20:17 IST Report Abuse
Devanand Louis உங்க அப்பன் இருந்த காலத்தில் வாங்கியது எவ்வளவு ?? கொள்ளையடித்தது எவ்வளவு ஸ்டாலின் ?? சரியாக விளக்கிச்சொல்
Rate this:
Share this comment
MALIK - FREMONT,யூ.எஸ்.ஏ
12-அக்-201819:08:41 IST Report Abuse
MALIKவாங்கியும், கரண்ட் கட்தானே இருந்தது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X