1,100 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு சோனியா மருமகனுக்கு உதவியது யார்?| Dinamalar

1,100 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு சோனியா மருமகனுக்கு உதவியது யார்?

Added : அக் 12, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெங்களூரு:காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா, பங்குதாரராக உள்ள நிறுவனம், 1,100 ஏக்கர் அரசு நிலத்தை முறைகேடாக ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதற்கு துணை போனவர்கள் பற்றி, லோக் ஆயுக்தா உள்ளிட்ட விசாரணை அமைப்புகளில் புகார் செய்யப்பட்டுள்ளதாக, பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரமேஷ் குற்றஞ்சாட்டினார்.

பெங்களூரு நகர, பா.ஜ., செய்தி தொடர்பாளர், ரமேஷ் அளித்த பேட்டி:
பெங்களூரு கங்கேனஹள்ளி பகுதியில், 1,100 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு, 7,000 கோடி ரூபாய். இந்த நிலத்தை, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா பங்குதாரராக உள்ள, டி.எல்.எப்., நிறுவனம், போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடாக ஆக்கிரமித்தது.
இந்த முறைகேடுக்கு, தற்போதைய நீர்ப்பாசன துறை அமைச்சரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான, டி.கே.சிவகுமார் முதுகெலும்பாக இருந்தார். முன்னாள் முதல்வர் சித்தராமையா, யஷ்வந்த்பூர் காங்கிரஸ், எம்.எல்.ஏ., சோமசேகர் ஆகியோரும், இந்த முறைகேட்டுக்கு உதவியுள்ளனர்.
சிவகுமார் உள்ளிடடோர் மீது, லோக் ஆயுக்தா, அமலாக்க பிரிவு, வருமான வரித்துறை ஆகிய விசாரணை அமைப்புகளில் புகார் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.அரசு நிலம் முறைகேடாக ஆக்கிரமிக்கப்பட்டதற்கான ஆவணங்களையும், அவர் வெளியிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
12-அக்-201822:38:12 IST Report Abuse
samuelmuthiahraj அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அந்த நிலத்தை மீண்டும் அரசுக்கே அளிக்கவேண்டும் அல்லது தற்போது அதனுடைய மதிப்பீடு எவ்வளவோ அதனை முழுமையாய் அரசு நிதியில் கட்டிட வேண்டும் அதனை தானமாக கொடுத்த ஆட்சியாளர்கட்கும் அதிகாரிகட்கும் உரிய த்தண்டனையும் வழங்கவேண்டும் தற்போது அரசியல்வாதிகள் சாலைகள் பொதுஇடங்கள் எல்லாவற்றையும் ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்கள் காஞ்சிபுரம் மாமல்லன் நகரில் பயங்கரமான ஆக்கிரமிப்பு பா ம க பிரமுகர் செய்துவருகிறார் எல்லாவற்றையும் கண்டிக்கும் ராமதாஸ் அவர்கள் இதனை முதலில் சரி செய்தால் அவரது கட்சி முன்னேற்றம் காணும்
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
12-அக்-201822:24:06 IST Report Abuse
adalarasan ஹரியானா டெல்லி மட்டும் தான் கைவரிசையை, காட்டினார், என்று நினைத்தேன்இப்பொழுது, கர்நாடகாவிலுமா?அடே அப்பா, 1100 ஏக்கர் ?கூடிய சீக்கரம்,விசாரித்து உண்மை வெளி வரட்டும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X