மதுரை ஆவினில் தலையிட்ட ஓ.பி.எஸ்., தம்பி ராஜாவிற்கு 'செக்'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதுரை ஆவினில் தலையிட்ட ஓ.பி.எஸ்., தம்பி ராஜாவிற்கு 'செக்'

Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:மதுரை ஆவின் சேர்மன் பதவியை கைப்பற்ற நினைத்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ராஜாவிற்கு தேர்தலையே நிறுத்தி வைத்து முதல்வர் பழனிசாமி தரப்பு 'செக்' வைத்துள்ளது.
இந்த ஆவின் யூனிட் மதுரை, தேனி மாவட்டங்களை உள்ளடக்கியது. இதற்கு உட்பட்டு 17 நிர்வாக குழு இயக்குனர் பதவிகள் இதுவரை இரு மாவட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கை காட்டும் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. மாநில ஆவின் சேர்மன் பதவியை குறிவைத்து ஓ.பி.எஸ்., தம்பி ராஜா தேர்தலில் போட்டியிட்டார்.
இதற்கு மதுரை, விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.,வினரிடம் எதிர்ப்பு கிளம்பியது. 'ராஜா போட்டியிடுவதால் உரிய முறையில் தேர்தல் நடத்த வேண்டும்,' என தினகரன் எம்.எல்.ஏ., ஆதரவாளர் அம்மாவாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.மனுத்தாக்கல் நடந்த நிலையில் தேர்தல் அதிகாரி மிரட்டப்பட்டதாக கூறி தேர்தல் நிறுத்தப்பட்டது. இதனால் ராஜா தரப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: ஆவினில் தலையிடும் ராஜா குறித்து முதல்வரிடம் அமைச்சர்கள் முறையிட்டனர். ஜெயலலிதா இருந்த போதே இயக்குனர், சேர்மன் பதவிக்கு நடந்த தேர்வு குறித்தும் விளக்கினர். தேர்தல் நிறுத்த 'கிரீன் சிக்னல்' கிடைத்துள்ளது. இதன் மூலம் ராஜாவிற்கு 'செக்' வைக்கப்பட்டுள்ளது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X