அதிரடி... தொடருமா? அத்துமீறிய பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்:நடவடிக்கை தொடர்ந்தால் நிம்மதி| Dinamalar

தமிழ்நாடு

அதிரடி... தொடருமா? அத்துமீறிய பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்:நடவடிக்கை தொடர்ந்தால் நிம்மதி

Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை நகராட்சி மற்றும் போலீசார் இணைந்து அதிரடியாக அகற்றினர். இந்த நடவடிக்கை தொடர்ந்தால், நெரிசலில் தவிக்கும் மக்களுக்கும் நிம்மதி கிடைக்கும்.பொள்ளாச்சியில், வர்த்தக ரீதியாகவும், அரசியல் கட்சியினரும், விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைப்பது அதிகரித்து வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல், பாதசாரிகளுக்கு இடையூறு, இன்னல்கள் ஏற்படுகிறது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும், பிளக்ஸ் பேனர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, நகராட்சி, போலீஸ் அதிகாரிகள் இணைந்து, நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.இதற்காக, கடந்த மாதம் நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. பொள்ளாச்சி நகரில் அனுமதிக்கப்பட்ட இடங்களில், அனுமதிக்கப்பட்ட அளவுகளில், முன் அனுமதி பெற்று மட்டுமே பிளக்ஸ் பேனர்கள் அமைக்க வேண்டும்.இதற்கு, 15 நாட்கள் முன்பே போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தில் முன் அனுமதி பெற வேண்டும். ஒரு பிளக்ஸ் வைக்க, 150 ரூபாய் அனுமதி கட்டணமாக நகராட்சிக்கு செலுத்த வேண்டும்.
பிளக்ஸ்களில், அனுமதி எண், அகற்றப்பட வேண்டிய தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டு அமைக்க வேண்டும். அனுமதியின்றியோ, அனுமதிக்கப்பட்ட தேதியை கடந்தோ பிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தால், சம்மந்தப்பட்டவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும்.மேலும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், நகராட்சி அலுவலகம், பஸ் ஸ்டாண்ட், அரசு அலுவலகங்கள், காந்தி சிலை அருகே, பஸ் ஸ்டாப்களை மறைத்து பிளக்ஸ் வைக்க கூடாது என, அறிவிக்கப்பட்டது.
விதிமீறல் பேனர்களை ஒவ்வொரு வியாழக்கிழமையும் நகராட்சி மற்றும் போலீசார் இணைந்து, ஆய்வு செய்து அகற்றுவர் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.அதன்படி, நேற்று, நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து, தடை செய்யப்பட்ட இடங்கள் மற்றும் அனுமதி பெறாத பேனர்களை கண்டறிந்து அகற்றினர்.
மகாலிங்கபுரம் ரவுண்டானா, தேர்நிலையம், பாலக்காடு ரோடு உள்ளிட்ட இடங்களில் விதிமீறல் பிளக்ஸ்களை அகற்றினர். இதையடுத்து, பிளக்ஸ் நிறுவனங்களே, அனுமதியற்றவைகளை அகற்ற முன்வந்தனர்.பொதுமக்கள் கூறுகையில், 'நகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகளின் இந்த நடவடிக்கை தொடர வேண்டும். பிளக்ஸ் பேனர்கள் ஆக்கிரமிப்பு இல்லாத நகரமாக பராமரிக்க வேண்டும். அரசியல் பாரபட்சமின்றி, போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்படும் பிளக்ஸ்களை அகற்ற வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X