நவ. 3 முதல் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நவ. 3 முதல் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம்

Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை:''தீபாவளி பண்டிகைக்காக, சென்னையில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும், 20 ஆயிரத்து, 567 பஸ்கள் இயக்கப்பட உள்ளன,'' என, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:சென்னையில் இருந்து, வெளியூர்களுக்கு தினமும், 2,275 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தீபாவளியை முன்னிட்டு, நவ., 3 முதல், 5ம் தேதி வரை, 4,542 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும். மூன்று நாட்களுக்கு, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன், சிறப்பு பஸ்களையும் சேர்த்து, 11 ஆயிரத்து, 367 பஸ்கள் இயக்கப்படும்.
அதேபோல, மற்ற ஊர்களில் இருந்து, தமிழகம் முழுக்க, மூன்று நாட்களுக்கு, 9,200 பஸ்கள் இயக்கப்படும். தீபாவளிக்காக, மூன்று நாட்களுக்கும் சேர்த்து, 20 ஆயிரத்து, 567 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பண்டிகை முடிந்து திரும்பி வர, நவ., 7 முதல், 10 வரை, பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, 4,207 பஸ்களும், பிற முக்கிய பகுதிகளிலிருந்து, பல்வேறு பகுதிகளுக்கு, 7,635 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
முன்பதிவுக்காக 30 மையங்கள், நவ., 1 முதல் செயல்படும்.ஆம்னி பஸ்களுக்கு, கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை. எனினும், அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, விரைவில் நிலுவைத் தொகை வழங்கப்படும். அவர்கள், 'ஸ்டிரைக் நோட்டீஸ்' கொடுத்துள்ளனர். பொது மக்கள் நலன் கருதி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டார்கள். மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ், அடுத்த வாரம் வழங்கப்படும். கண்டக்டர் இல்லாத பஸ்களுக்கு, நல்ல வரவேற்பு உள்ளது. சென்னைக்கு, 30 புதிய பஸ்கள், ஓரிரு வாரங்களில் வழங்கப்படும்.
நுாறு மின்சார பஸ்களை வாங்க, நடவடிக்கை எடுத்துள்ளோம். சென்னையில், 80 மின்சார பஸ்கள், கோவையில், 20 பஸ்கள் இயக்கப்படும். சிறப்பு பஸ்கள் இயக்க, கட்டுப்பாட்டு அறை திறக்க உள்ளோம். சுங்கச்சாவடிகளில் தனி வழி ஏற்படுத்தி, அங்கு, பஸ்கள் செல்வதை கண்காணிக்க, தனி அலுவலரை நியமிக்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


எந்த ஊரு பஸ் எங்கிருந்து கிளப்பும்



தீபாவளியை ஒட்டி, நவ., 3 முதல், 5 வரை, சென்னையில், ஐந்து இடங்களில் இருந்து, பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அவற்றின் விபரம்:
* மாதவரம், புதிய பஸ் நிலையத்திலிருந்து, ஆந்திரா செல்லும் பஸ்கள் இயக்கப்படும்
* சைதாப்பேட்டை நீதிமன்றம் பஸ் நிறுத்தத்தில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலை வழியே, புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் செல்லும் பஸ்கள் இயக்கப்படும்
* தாம்பரம், மெப்ஸ் பஸ் நிலையத்திலிருந்து, விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் இயக்கப்படும்
* பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து, வேலுார், ஆரணி, ஆற்காடு, திருப்பத்துார், ஓசூர் பஸ்கள் இயக்கப்படும்
* கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து, மற்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படும்
* முன்பதிவு செய்த பஸ்கள், கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு, பூந்தமல்லி, நசரத்பேட்டை,
'அவுட்டர் ரிங் ரோடு' வழியாக, வண்டலுார் சென்று, ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிறுத்தத்தில், முன்பதிவு செய்த பயணியரை ஏற்ற, வழிவகை செய்யப்பட்டுள்ளது
* நவ., 3 முதல், 5 வரை, கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், தாம்பரம், பெருங்களத்துார் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதுார், செங்கல்பட்டு வழியாக சென்றால், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணம் செய்யலாம்
* கன ரக வாகனங்கள், மூன்று நாட்களுக்கும், பகல், 2:00 மணி முதல், அதிகாலை, 2:00 மணி வரை, மதுரவாயல் முதல் செங்கல்பட்டு வரை உள்ள வழித்தடத்தை தவிர்த்து, மாற்று வழியில் செல்லும். இதனால், தாம்பரம், பெருங்களத்துார், வண்டலுார், ஊரப்பாக்கம் வரை, போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X