தரிசன கட்டணம் வசூலிப்பது கோயிலை வணிகமாக்கும் செயல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தரிசன கட்டணம் வசூலிப்பது கோயிலை வணிகமாக்கும் செயல்

Added : அக் 12, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரைக்குடி:''தரிசன கட்டணம் வசூலிப்பது கோயிலை வணிக நிறுவனமாக்கும் செயல்'' என, காரைக்குடியில் பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா கூறினார்.
அவர் கூறியதாவது: தமிழக இந்து கோயில்களுக்கு உள்ள சொத்துக்கள் போன்று, உலகில் வேறு எந்த கோயில்களுக்கும் கிடையாது. அவற்றை சந்தை விலையில் குத்தகைக்கு விட்டால் போதும். வருமானம் இல்லாத கோயிலைகளையும் வளமாக்கலாம். இதை செய்யாமல், பக்தர்களிடம் தரிசன கட்டணம், அபிேஷக கட்டணம் வாங்குவது, இந்துக்களை வேண்டுமென்றே ஆன்மிக பாதையிலிருந்து திசை திருப்பி, கோயில்களை வணிக நிறுவனமாக்கும் செயல்.
மாவட்ட நீதிபதிகள் ஆலயங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்து வருகின்றனர். இதில் பல விஷயங்கள் கவனிக்கப்படவில்லை. சட்டப்படி கோயில் சொத்து, தங்க நகைகள், விக்ரகங்கள் குறித்த பதிவேடு பராமரிக்க வேண்டும். எந்த கோயிலிலும் பதிவேடு பராமரிக்கவில்லை.
இதனால்தான் தமிழக அமைச்சர் பாண்டியராஜன், ''பல சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை எந்த கோயில் என்பதற்கான ஆவணம் இல்லை'' என கூறியுள்ளார். இது அறநிலையத்துறை குற்றம்.

ஆண்டுக்கு 5 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் பெறும் கோயில்களை, தலைமை கணக்காயர் தணிக்கையில் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் வெளிப்படை தன்மை இருக்கும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-அக்-201807:15:51 IST Report Abuse
பாரதன். பாஜகவின் இந்தக் கருத்துகளை ஏன் கோயில்களை ஆய்வு செய்ய வரும் மாவட்ட நீதிபதிகளிடம் மனுவாகக் கொடுத்து நேரிலும் வலியுறுத்திச் சொல்லக்கூடாது? கோயிலுக்கு வரும் அமைச்சர்களிமும் கொடுக்கலாமே? இப்படித் தொடர்ந்து செய்தால் இன்றில்லை எனினும் விரைவில் தீர்வு கிடைக்கும் அல்லவா?
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
12-அக்-201806:46:41 IST Report Abuse
Amirthalingam Sinniah வரவேற்கத்தக்க நடவடிக்கை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X