இடை நில்லா விமான சேவை: சிங்கப்பூர் மீண்டும் துவக்கம்| Dinamalar

இடை நில்லா விமான சேவை: சிங்கப்பூர் மீண்டும் துவக்கம்

Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சிங்கப்பூர்:உலகின் நீண்ட துார, இடை நில்லா விமான சேவையை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீண்டும் துவக்கியுள்ளது. இதன் மூலம், சிங்கப்பூரிலிருந்து, 19 மணி நேரத்தில், அமெரிக்காவின் நியூயார்க் நகரை சென்றடையலாம்.
மேற்காசிய நாடான, கத்தாரின், தோஹா நகரிலிருந்து, ஆஸ்திரேலிய கண்டத்தில் உள்ள, தீவு நாடான, நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்கு, கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் சார்பில், விமான சேவை அளிக்கப்படுகிறது.
இந்த நகரங்களுக்கு இடையேயான, 14 ஆயிரத்து, 500 கி.மீ., துாரத்தை, 19 மணி நேரம், 30 நிமிடங்களில், இடை நில்லாமல் கடப்பதால், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விமான சேவையே, உலகின் மிக நீண்ட துார, இடை நில்லா விமான சேவையாக, இது இருந்தது.தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரிலிருந்து, அமெரிக்காவின், நியூயார்க் நகருக்கு, 15 ஆயிரத்து, 400 கி.மீ., துாரத்தை, 19 மணி நேரங்களில், இடை நில்லாமல் கடக்கும் விமான சேவையை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மீண்டும் துவங்கியுள்ளது.
இந்த நிறுவனம், ஏற்கனவே இந்த வழித்தடத்தில் இடை நில்லா விமான சேவையை வழங்கிய நிலையில், விமான எரிபொருள் விலை ஏற்றம் காரணமாக, நான்கு ஆண்டுகளுக்கு முன், இந்த விமான சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், பயணியருக்கான கூடுதல் வசதிகளையும் அமல்படுத்தி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், சிங்கப்பூர் - நியூயார்க் இடையே, மீண்டும் விமான சேவையை துவக்கியுள்ளது. இதன் மூலம், உலகின் மிக நீண்ட துார, இடை நில்லா விமான சேவை என்ற பெருமையை மீண்டும் தக்க வைத்துள்ளது.
சிங்கப்பூர் - நியூயார்க் விமானத்தின் சிறப்பு அம்சங்கள்: விமானத்தில், 161 பேர் பயணிக்க முடியும். பயணியர் அமரும் வகையிலும், படுத்து உறங்கும் வகையிலும் இருக்கை, படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இதற்கு முன், 253 பயணியர் பயணிக்கும் வகையில் இருந்தது. தற்போது, இருக்கை, படுக்கைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, பயணியருக்கு வசதியாக, தாராளமான இட வசதி செய்யப்பட்டுள்ளது.
விமானத்தில், சைவ, அசைவ உணவு வகைகள் கிடைக்கும்.பொழுது போக்கு அம்சங்கள், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இலவச இன்டர்நெட் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பயணியர் மட்டுமின்றி, விமானத்தில் பயணிக்கும், விமான ஊழியர்கள், விமானத்தை ஓட்டிச் செல்லும் பைலட் ஆகியோர், ஒரு முறை சிங்கப்பூரிலிருந்து, நியூயார்க் சென்றடைந்ததும், அங்கு, மூன்று நாட்கள் தங்கவும், ஊர் சுற்றிப் பார்க்கவும் அனுமதிக்கப்படுவர்.
தற்போது, விமானத்தின் எடை குறைக்கப்பட்டுள்ளதால், எரிபொருள் செலவும் மிச்சமாகும் என, விமான நிறுவனத்தின் சார்பில் கூறப்படுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X