எழுத்தாளர் கலாப்ரியாவுக்கு விருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எழுத்தாளர் கலாப்ரியாவுக்கு விருது

Updated : அக் 12, 2018 | Added : அக் 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எழுத்தாளர் கலாப்ரியா, மனோன்மணியம் சுந்தரனார் விருது, நெல்லை பல்கலை, பேராசிரியர் இளையபெருமாள், சீனி விஸ்வநாதன், தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன், எழுத்தாளர் கி.ராஜநாராயணன்,  இயற்பெயர் சோமசுந்தரம், 
Writer kalapriya, Manonmaniam Sundaranar Award, Nellai University,
Professor Ilaiyaperumal, Srini Viswanathan, Tamil poet SV Subramanian, Writer K. Rajanarayanan,  Somasundaram,

திருநெல்வேலி: எழுத்தாளர் கலாப்ரியாவுக்கு, 68, நெல்லை பல்கலையின் 'மனோன்மணியம் சுந்தரனார் விருது' இன்று வழங்கப்பட்டது. .
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை சார்பில் தமிழில் கலை, பண்பாடு, இலக்கியம், மொழி ஆகியவற்றில் சிறந்து விளங்குவோரை தேர்வு செய்து இந்த விருது வழங்கப்படுகிறது.2014ல் முதன்முதலாக பேராசிரியர் இளையபெருமாள், சீனி விஸ்வநாதனுக்கு இணைந்து வழங்கப்பட்டது. 2015ல் தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன், 2016ல் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு கலாப்ரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது இயற்பெயர் சோமசுந்தரம். நெல்லை மாவட்டம் கடையநல்லுார் அருகே இடைக்காலில் வசிக்கிறார். வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.தமிழக அரசின் கலைமாமணி விருது, ஜெயகாந்தன் விருது, கண்ணதாசன் விருது, திருப்பூர்தமிழ்ச்சங்க விருது, சென்னை புத்தக கண்காட்சி அமைப்பாளர்களின் கருணாநிதி பொற்கிழி விருது பெற்றுள்ளார். 'வேனல்' என்ற நாவலை சமீபத்தில் எழுதினார். இன்று நெல்லை பல்கலை வளாகத்தில் நடந்த விழாவில் விருதுடன் ஒரு லட்சம் ரூபாய், பட்டயச்சான்றிதழை தென்காசி ஜவஹர் வழங்கி வாழ்த்தி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-அக்-201818:30:03 IST Report Abuse
Bhaskaran நமது நெல்லை சீமையின் மற்றொரு மகுடத்துக்கு நல்வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X