முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும்: ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும்: ஸ்டாலின்

Updated : அக் 12, 2018 | Added : அக் 12, 2018 | கருத்துகள் (72)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை : டெண்டர் முறைகேடு புகாரில் சி.பி.ஐ., விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதல்வர் பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ஊழல் நடந்துள்ளதாக, முதல்வர் பழனிசாமி மீது சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது: நெடுஞ்சாலை டெண்டர் புகாரை சி.பி.ஐ., விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. சம்பந்திக்கு டெண்டர் கொடுப்பதில் என்ன தவறு என கோர்ட்டில் வாதாடியவர் பழனிசாமி. ஆதாரங்களை அழிக்க நேரம் தராமல் விரைவாக சி.பி.ஐ., விசாரணையை துவங்க வேண்டும்.

இனியும் அவர் முதல்வராக நீடிப்பது தமிழகத்திற்கு அவமானம். முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும், மறுத்தால் கவர்னர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இதுகுறித்து விசாரணை மட்டுமின்றி, அவர் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த 2011-2016 ஆட்சிக் காலத்திலும், மேலும் 2016 முதல் தற்போது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊழல்களையும் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


17 ம் தேதி திமுக ஆலோசனை



வரும் 17 ம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் நடக்கவிருப்பதாக திமுக பொது செயலர் அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை அறிவாலயத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் பார்லி., தேர்தல் குறித்தும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது .

Advertisement




வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-அக்-201811:59:58 IST Report Abuse
அருணா ஊழலில் ஊறிப்போன உங்க குடும்பத்தையும் மக்கள் தேர்தலுக்கு முன்பே தள்ளி வைத்து விட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
13-அக்-201810:30:38 IST Report Abuse
Anand இவருக்கு வேற வேலையே இல்லியா? எப்பப்பாத்தாலும் கோபம் வர்றமாதிரி காமெடி செய்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
gilji - tanjore,இந்தியா
13-அக்-201810:11:52 IST Report Abuse
gilji எப்படியும் 5 வருஷம் ஓட்டிடுவாங்க .............'பதவி விலக வேண்டும்' என்கிற வார்த்தை இந்த 5 வருடத்தில் கணக்கெடுத்தால் அது கின்னஸ் சாதனை தான் தலைவரே அதால கின்னஸ் ல உங்க பெரு நிலைத்து நிற்கும் ...இது மாதிரி வேறு யாருக்கும் அமையாது .........உங்க ராசி அப்படி .......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X