3 கோடி, 'பேஸ்புக்' பயனாளர்களின் தகவல்கள் திருட்டு: அமெரிக்க புலனாய்வு அமைப்பு விசாரணை Dinamalar
பதிவு செய்த நாள் :
திருட்டு!
3 கோடி, 'பேஸ்புக்' பயனாளர்களின் தகவல்கள்...
அமெரிக்க புலனாய்வு அமைப்பு விசாரணை

புதுடில்லி 'பேஸ்புக் பயன்படுத்தும், மூன்று கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது' என, 'பேஸ்புக்' சமூக வலைதள நிறுவனத்தின் துணைத்தலைவர், கய் ரோஸ்டன் தெரிவித்தார். இது தொடர்பாக, அமெரிக்க புலனாய்வு அமைப்பான, எப்.பி.ஐ., விசாரித்து வருகிறது.

பேஸ்புக், அதிபர் தேர்தல், அமெரிக்கா, திருட்டு


உலகளவில் செயல்படும் மிகப்பெரிய சமூக வலைதளமாக, 'பேஸ்புக்' உள்ளது. இதில், உலகம் முழுவதும், 200 கோடிக்கு அதிகமானோர் பயனாளர்களாக உள்ளனர். இந்தியாவில் மட்டும், 20 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். தங்களை பற்றிய விபரங்களை, பேஸ்புக்கில் அவர்கள் பதிவிட்டுள்ளனர். அத்துடன், தங்களின் எண்ணங்கள், ஆசைகள் உட்பட பல தகவல்களையும், புகைப்படங்கள், வீடியோக்களையும், பேஸ்புக்கில் வெளியிடுவது, பலரின் வழக்கம்.

அதிபர் தேர்தல் :

ஆனால், பேஸ்புக்கில் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படும் சம்பவம், சமீப காலமாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில், 2014ல், அதிபர் தேர்தல் நடந்தது. ஐரோப்பிய

நாடான, பிரிட்டன் தலைநகர், லண்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'கேம்பிரிட்ஜ் அனலிடிகா' நிறுவனம், அமெரிக்க தேர்தல் நேரத்தில், 'பேஸ்புக்'கின், ஐந்து கோடி பயனாளர்களின் தகவல்களை திருடி, தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.குறிப்பாக, தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட, டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம்செய்ய, இந்த தகவல்களை பயன்படுத்தியதாக, அனலிடிகா நிறுவனம் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதை, பேஸ்புக் நிறுவனமும் ஒப்புக் கொண்டது. இதனால், பேஸ்புக்கில் பதிவிடும் தகவல்கள், பாதுகாப்பானதில்லை என்ற நிலை ஏற்பட்டது.

பிரசாரம் :

அதைத் தொடர்ந்து, அமெரிக்க தேர்தல் மட்டுமின்றி, இந்தியா, பிரேசில் உட்பட பல நாடுகளின் தேர்தல்களில், பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு, பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகின. இந்தியாவில், அடுத்தாண்டு நடக்க உள்ள, லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு ஆதரவாகவும், அதன் தலைவர் ராகுலின் செல்வாக்கை உயர்த்துவதற்கும், கேம்பிரிட்ஜ் அனலிடிகாவை பயன்படுத்த, ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். மேலும், இந்திய மக்களின் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாகவும் விளக்கம் அளிக்கும்படி, பேஸ்புக், கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனங்களுக்கு, மத்திய அரசு, 'நோட்டீஸ் 'அனுப்பியுள்ளது.

Advertisement

இந்நிலையில், பேஸ்புக் பயன்படுத்துவோரில், மூன்று கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக, அந்நிறுவனத்தின் துணைத் தலைவர், கய் ரோஸ்டன் தெரிவித்தார்.அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அவர் கூறியதாவது: பேஸ்புக்கிலிருந்து, 2017 ஜூலை முதல், இந்த ஆண்டு செப்டம்பர் வரை, மூன்று கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.புகைப்படங்கள் : பேஸ்புக் கணக்கு வைத்திருப்போரின் பெயர், பாலினம், மொழி, நட்புகள், உறவுகள், பிறந்த நாள், வசிப்பிடம், கல்வி, தொழில், சென்ற இடங்கள், தொடர்பு முகவரிகள், தொலைபேசி எண்கள், இ - மெயில் முகவரிகள், அவர் தேடிய விபரங்கள், தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் திருடப்பட்டுள்ளன. இந்த விவரங்களை, 'டிஜிட்டல் லாகின் பாஸ்வேர்டுகள்' மூலம், 'ஹேக்கர்'கள் எனப்படும், இணைய திருடர்கள் திருடியிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணையை, அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான, எப்.பி.ஐ., மேற்கொண்டுள்ளது. இந்த விசாரணைக்கு, பேஸ்புக் நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-அக்-201821:59:26 IST Report Abuse

ஆப்புஅச்சே தின் ஆனே வாலா ஹைன்...ஆதார் தகவலை யாரும் திருட முடியாது ஹைன்..திருடுனாலும் நமக்குத் தெரியாது ஹைன்...திருடுனவன் பரிதாபப் பட்டு நமக்கு சொன்னால் ஒழிய நமக்கு தெரியப் போவதில்லை ஹைன்...கம்ப்யூட்டரையே நமது மூதாதையர்கள்தான் கண்டு புடிச்சாங்க ஹைன்...அதை வெளிநாட்டுக்காரன் திருடுட்டான் ஹைன்...நமக்கு தெரியாமலே திருடிட்டான் ஹைன்...

Rate this:
14-அக்-201821:59:30 IST Report Abuse

ஆப்புஅச்சே தின் ஆனே வாலா ஹைன்...ஆதார் தகவலை யாரும் திருட முடியாது ஹைன்..திருடுனாலும் நமக்குத் தெரியாது ஹைன்...திருடுனவன் பரிதாபப் பட்டு நமக்கு சொன்னால் ஒழிய நமக்கு தெரியப் போவதில்லை ஹைன்...கம்ப்யூட்டரையே நமது மூதாதையர்கள்தான் கண்டு புடிச்சாங்க ஹைன்...அதை வெளிநாட்டுக்காரன் திருடுட்டான் ஹைன்...நமக்கு தெரியாமலே திருடிட்டான் ஹைன்...

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-அக்-201808:54:03 IST Report Abuse

Pugazh Vஆபீஸ் பாஸை கச்சாமுச்சா ன்னு திட்டி fb ல போட்டுட்டு, நான் அவனில்லை சார், யாரோ என் அக்கவுண்ட் ஹேக் பண்ணிட்டாங்க சார் னு சொல்லி டலாம்

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-அக்-201818:30:32 IST Report Abuse

Kasimani Baskaranஉமது மாணவர்கள் நீர் சொல்லும் யோசனையை பின்பற்றி உமக்கு இதை செய்தால் உமக்கு எப்படி இருக்கும் வாத்தி?...

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X