எச்.ஏ.எல்., ஊழியர்களுடன் காங்., தலைவர் ராகுல் சந்திப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
எச்.ஏ.எல்., ஊழியர்களுடன் காங்., தலைவர் ராகுல் சந்திப்பு

பெங்களூரு: 'ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில், எச்.ஏ.எல்.,லுக்கு கிடைக்க வேண்டிய ஒப்பந்தத்தை மத்திய அரசு பறித்துக் கொண்டது' என, காங்., தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டினார்.

ராகுல், எச்.ஏ.எல்., ரபேல்


ஐரோப்பிய நாடான பிரான்சிடமிருந்து, 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஊழல்

நடந்துள்ளதாக, ராகுல், தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.இந்த நிலையில், கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள, எச்.ஏ.எல்., எனப்படும்,'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்' நிறுவனத்துக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல், நேற்று சென்றார். எச்.ஏ.எல்., வளாகத்தில், அதன் ஊழியர்களுடன், ராகுல் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:நாட்டின் கவுரவத்தையும், பாதுகாப்பையும் கட்டிக் காத்து வரும் மிகப் பெரிய பொறுப்பு, எச்.ஏ.எல்.,லுக்கு உள்ளது. ஆனால், ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில், எச்.ஏ.எல்.,லுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை, மத்திய அரசு பறித்து, தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு அளித்துள்ளது.

Advertisement

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும், எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு பாதுகாப்பாக காங்கிரஸ் கட்சி எப்போதும் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.அதைத் தொடர்ந்து, ஊழியர்களிடம், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான கருத்துக்களை அவர் கேட்டறிந்தார்.


Advertisement

வாசகர் கருத்து (32+ 63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
14-அக்-201817:43:53 IST Report Abuse

tamilvananராகுல்ஜி ஒரு வீண் வாதத்தை கிளப்பி விட்டு அதில் அரசியல் ஆதாயம் தேட முயலுகிறார். விமானப்படைக்கான விமானங்கள் செய்வதில் ஒன்றுக்கு மேல் இன்னொரு கம்பெனியும் இருந்தால் நல்லது தானே. அப்போது தான் ஒரே ஒரு கம்பெனியின் நிர்வாக குறைபாட்டினை சரி செய்யமுடியும். அதற்காகத்தான் தொலை பேசி, மற்றும் தொலை காட்சி நிறுவனங்களில் தனியார் கம்பெனிகளும் அனுமதிக்கப்பட்டன. இல்லாவிடில், எல்லோரும் தூர் தர்ஷனை அல்லவா பார்த்து கொண்டு தினமும் அமைச்சர் பேச்சை பார்த்து கொண்டு இருக்கவேண்டும். ஒரு ராகுல்நாக்கு தனது தந்தை ராஜிவ் தான் இந்த புரட்சிக்கு அடிக்கல் நாட்டினார் என்று மார் தட்டிக்கொள்கிறது. இன்னொன்று அதையே விமானத்துறையில் செய்த மோடியை தாக்குகிறது. இரட்டைவேடம்.

Rate this:
bal - chennai,இந்தியா
14-அக்-201816:16:37 IST Report Abuse

balஇந்த ஆளுக்கு கட்டிங் கிடைக்கலையே என்று ஆதங்கம்.

Rate this:
Krishna - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-அக்-201812:41:49 IST Report Abuse

Krishnaவெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலுள்ள நிறுவனம் தனது போட்டியாளர் நிறுவனத்திற்கு பணி செய்தல் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளாது. ரபில் விஷயத்திலயும் இது தான் நடந்திருக்கிறது. ரபில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலயும் ஹேச் எ ல் உடன் ஒப்பந்தம் செய்ய மறுத்தது. அரசியல் கட்சிகள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் சுலபமான வழி பொது நிறுவனம் மூலமாக முடியும். இந்த ராகுல் நாட்டை ஏமாற்றி வருகிறார். இந்த நாட்டை லஞ்சஊழல் நாடக மாற்றியதற்கு காங்கிரஸ்க்கும் பெரிய பங்கு உண்டு.

Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X