கடற்கரை பகுதியில் வாலிபர் கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடற்கரை பகுதியில் வாலிபர் கொலை

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மாமல்லபுரம்: சூலேரிக்காடு கடற்கரையில், அடையாளம் தெரியாத வாலிபர், கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.மாமல்லபுரம் அடுத்த, சூலேரிக்காடு, கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில், கடற்கரை நோக்கிய உட்புறச் சாலையில், ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக, மாமல்லபுரம் போலீசாருக்கு, நேற்று காலை தகவல் கிடைத்தது.போலீஸ் டி.எஸ்.பி., சுப்பாராஜூ, இன்ஸ்பெக்டர் ரவிகுமார் மற்றும் போலீசார், 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடலை மீட்டனர். முகத்தில் கருங்கல்லால் தாக்கப்பட்டு, கொலையாகி இருப்பது தெரிந்தது. உடல் அருகில், கருங்கற்களும் கிடந்தன.விசாரணையில், காலை, 9:00 மணிக்கு, சம்பவ இடத்திற்கு இருவர் ஆட்டோவில் வந்ததாக தெரிகிறது. மோப்ப நாய், கிழக்கு கடற்கரைச் சாலை, பேருந்து நிறுத்தப் பகுதி வரை ஓடி நின்றது.கொலையானவர் யார், கொலை செய்தது யார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.கடந்த, 3ல், திருவிடந்தை பகுதியில், நெய்வேலி வாலிபர் அருண்பிரகாஷ் கொலையான நிலையில், அதே போல், கடலோரப் பகுதியில், மீண்டும் கொலை அரங்கேறியுள்ளது, அப்பகுதியினரிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X