பேரிடர் தணிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பேரிடர் தணிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பேரிடர் தணிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம், புனித மரியன்னை பள்ளியில், பேரிடர் தணிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.மண்டல விளையாட்டு போட்டிகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மண்டல அளவில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த, 14, 17, 19 வயதிற்குட்பட்ட, 900 மாணவ - மாணவியர் பங்கேற்றனர். நீச்சல், வாள் சண்டை, ஸ்குவாஸ் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டன.கணினி உயிரியல் தேசிய மாநாடுகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 'ஓமிக்ஸ்' கணினி உயிரியலின் பயன்பாடுகள் குறித்து, தேசிய மாநாடு நடந்தது. தமிழகத்தின், பல நிறுவனங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இரு நாட்கள் நடந்த மாநாட்டிற்கு, கல்லுாரி முதல்வர் முனைவர் கலை ராம.வெங்கடேசன் தலைமை வகித்தார்.திருக்கழுக்குன்றத்தில் சாலை மறியல்திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே, 10ம் தேதி, வி.சி.க., தலைவர் திருமாவளவன், ஆட்டோ ஓட்டுனர் சங்க பெயர் பலகை திறந்து வைத்தார். இந்த பலகையை, நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதனால், நுாற்றுக்கும் மேற்பட்டோர், செங்கல்பட்டு சாலையில் மறியல் செய்தனர். போலீஸ் சமாதானத்தையடுத்து கலைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X