அதிகார துஷ்பிரயோகம் கூடாது உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகார துஷ்பிரயோகம் கூடாது உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுரை

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:''நமக்குள் ஒற்றுமை மேம்பட வேண்டும்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம்; அதிகார துஷ்பிரயோகம் கூடாது,'' என உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறினார்.மதுரையில் பிரம்மஞானத் தமிழ்ச் சம்மேளம் 92வது ஆண்டு விழா நடந்தது. சம்மேளன மதுரை தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சேலம் தலைவர் ரங்கராஜன் தலைமை வகித்தார்.நீதிபதி சுவாமிநாதன் பேசியதாவது: பிரதமர் இந்திரா கொண்டு வந்த எமர்ஜென்சியை உச்ச நீதிமன்ற நீதிபதி ரேயன்ரே ஆதரித்தது பலருக்கு பிடிக்காமல் போனது. 1977ல் இந்திரா தோல்வியடைந்தார். பின் 1980ல் மீண்டும் ஆட்சியை பிடித்தார். ரேயன்ரேக்கு உயர் பதவி வழங்க தயாராக இருந்தார்.அவர், 'ராமகிருஷ்ண மடத்தில் தொண்டு செய்கிறேன்,' எனக்கூறி பதவியை ஏற்க மறுத்தார். அறம் சார்ந்த சிந்தனைகளுடன் இருந்தால் மட்டுமே நல்ல எண்ணம், நீதி பிறக்கும். ஒற்றுமை மேம்பட வேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம், அதிகார துஷ்பிரயோகம் கூடாது. இம்மூன்று குணங்களை பேணி காக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X