மொட்டை கடிதங்களை கடாசுங்கள்: அரசு துறைகளுக்கு அதிரடி உத்தரவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மொட்டை கடிதங்களை கடாசுங்கள்: அரசு துறைகளுக்கு அதிரடி உத்தரவு

Added : அக் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி:'அரசு அதிகாரிகள் மீது, பெயர் குறிப்பிடாமல் அளிக்கப்படும் ஊழல் புகார்கள் தொடர்பாக, நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை' என, அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும், மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தகவல் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மத்திய அரசுப் பணியில், ஒருவர் உயர் பதவிக்கு பரிந்துரைக்கப்படும் போது அல்லது முக்கியமான பணிக்காக அவர் நியமிக்கப்படும்போது, அவர் மீது, ஏராளமான ஊழல் புகார்கள் அளிக்கப்படுவது வழக்கம்.
இப்படிப்பட்ட புகார்களை அளிப்பவர்கள், பெரும்பாலும் தங்கள் பெயரை குறிப்பிடாமல், புகார்களை மொட்டை கடுதாசியாக அளிக்கின்றனர். கற்பனையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.இதுபோன்ற புகார்களை, சம்பந்தப்பட்ட துறையினர், பதிவு செய்தால் மட்டும் போதும். அதன் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசில் உள்ள அனைத்து துறை அலுவலகத்துக்கும், பணியாளர் நலத்துறை சார்பில், இந்த அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது.அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும், மத்திய புலனாய்வுதுறை கமிஷனும், இதே போன்ற ஒரு அறிக்கையை அனுப்பி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-அக்-201808:55:10 IST Report Abuse
Srinivasan Kannaiya தெரிந்தா மொட்டை அடிச்சு செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றி அவமான படுத்தி விடுவார்கள் என்றுதான் மொட்டை எழுதுகிறார்கள்.. அதற்கும் ஆப்பா ... இனி லஞ்சம் .முறைகேடுகள் பெருத்து விடும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X