மார்பக புற்றுநோய் கருத்தரங்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மார்பக புற்றுநோய் கருத்தரங்கம்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 மார்பக புற்றுநோய் கருத்தரங்கம்

பொன்னேரி: பொன்னேரி அரசு கலை மற்றும் அறிவியில் கல்லுாரியில், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், நேற்று நடந்தது.பொன்னேரி அரசு மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தலைமை மருத்துவர் அனுரத்னா பங்கேற்று, மார்பக புற்றுநோய் குறித்து, மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உண்டாகும் காரணங்கள், மார்பக புற்றுநோயை எவ்வாறு கண்டறிந்து சிசிச்சை பெறுவது என, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.ஊராட்சிகளில் துாய்மை பணிதிருத்தணி: திருத்தணி ஒன்றியம், பெரியகடம்பூர் மற்றும் புச்சிரெட்டிப்பள்ளி ஊராட்சிகளில், ஒன்றிய நிர்வாகம் மற்றும் சுகாதார துறையின் சார்பில், 'டெங்கு' விழிப்புணர்வு பணி நேற்று நடந்தது. ஒன்றிய ஆணையர் லட்சுமணன் உள்ளிட்ட அதிகாரிகள், வீடுதோறும் சென்று, டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இரண்டு ஊராட்சிகளிலும் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.பசுந்தாள் உரம் விதை கொள்முதல்திருவள்ளூர்: திருவாலங்காடு வட்டாரத்தில், கூட்டு பண்ணையத் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள, எட்டு உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. திருவாலங்காடு வேளாண் உதவி இயக்குனர் எபினேசர் தலைமை வகித்தார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பாண்டியன், கூட்டு பண்ணைய விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார்.மானியத்தில், பசுந்தாள் உர விதைகளை விதைப்பு செய்து பயனடைய பயிற்சி அளிக்கப்பட்டது.கணினி உயிரியல் தேசிய மாநாடுகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 'ஓமிக்ஸ்' கணினி உயிரியலின் பயன்பாடுகள் குறித்து, தேசிய மாநாடு நடந்தது. தமிழகத்தின், பல நிறுவனங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இரு நாட்கள் நடந்த மாநாட்டிற்கு, கல்லுாரி முதல்வர் முனைவர் கலை ராம.வெங்கடேசன் தலைமை வகித்தார்.திருக்கழுக்குன்றத்தில் சாலை மறியல்திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே, 10ம் தேதி, வி.சி.க., தலைவர் திருமாவளவன், ஆட்டோ ஓட்டுனர் சங்க பெயர் பலகை திறந்து வைத்தார். இந்த பலகையை, நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதனால், நுாற்றுக்கும் மேற்பட்டோர், செங்கல்பட்டு சாலையில் மறியல் செய்தனர். போலீஸ் சமாதானத்தையடுத்து கலைந்தனர்.செங்கல்பட்டில் அறிவியல் கண்காட்சிசெங்கல்பட்டு: செங்கல்பட்டு கல்வி மாவட்டம் சார்பில், 46வது அறிவியல் மற்றும் கணித கண்காட்சி, செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள, தனியார் மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தலைமை தாங்கினார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த, 330 மாணவர்கள் பங்கேற்று, சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பது, எரிபொருள் சிக்கனம் உட்பட, 240க்கும் மேலான மாதிரி படைப்புகளை அமைத்திருந்தனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X