போலீஸ் செய்திகள்...////| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்...////

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

6 கிலோ தங்கம் மோசடிமதுரை: விளாச்சேரி மெயின் ரோட்டில் தங்க நகை தொழில் செய்து வருபவர் ரிச்சர்ட் லாரன்ட். மதுரை சொக்கப்பன் நாயக்கர் தெருவில் நடை கடை வைத்திருக்கும் கணேசனிடம்,38, தங்க நகைகளை விற்க கொடுப்பார். அதற்கு கமிஷனும் தருவார். கடந்த ஜூலை 27 ல் 13.58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை வாங்கிய கணேசன் தலைமறைவானார். அவரை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கதிர்வேல் கைது செய்தார். கணேசன் 13 பேரிடம் 6 கிலோ தங்க நகைகள் வாங்கி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.போலி ஆர்.டி.ஓ., 'சீல்'மதுரை: வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் சதாசிவ நகர் சரவணன் முத்துகிருஷ்ணன் என்பவர் 2017 மாடல் காரை பதிவு செய்தார். கார் விற்ற நிறுவனம் வழங்கிய ஆர்.சி. புக்கில் ஆண்டு மாறியிருந்தது. விசாரணையில் போலியாக ஆர்.டி.ஓ., 'சீல்' போன்றவற்றை தயாரித்து ஆர்.சி. புக்கில் திருத்தம் செய்தது தெரியவந்தது. புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.மசாஜ் சென்டரில் 'மஜா'மதுரை: பெருமாள் தெப்பம் லாட்ஜ் ஒன்றில் 'டிலா' மசாஜ் சென்டர் உள்ளது. இங்கு விபச்சாரம் நடத்தியதாக கேரளா திருச்சூர் நித்யா,32, கீரைத்துரை பொன்மணி,25, ராஜ்குமார்,19, நெல்லை செல்வம்,24, ஆகியோரை கைது செய்தனர். மேற்கு வங்காளம், புதுச்சேரி மாநில பெண்கள் மீட்கப்பட்டனர்.30 அலைபேசிகள் மீட்பு மதுரை: மாவட்டத்தில் திருடுபோன அலைபேசிகள், டூவீலர்களை சைபர் கிரைம் போலீஸ் மூலம் மீட்க எஸ்.பி., மணிவண்ணன் உத்தரவிட்டார். இதன்படி 30 அலைபேசிகள், 4 டூவீலர்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி 'ஓ.டி.பி.' நம்பர் பெற்று 34 பேரிடம் பணத்தை சுருட்டிய வழக்குகளில் 4.33 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு மீண்டும் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது.நுாலகம் திறப்புமதுரை: மாவட்ட ஆயுதப்படையில் எஸ்.பி., மணிவண்ணன் ஏற்பாட்டில் போலீசாருக்கான நுாலகத்தை டி.ஐ.ஜி., பிரதீப்குமார் திறந்து வைத்தார். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் இந்நுாலகம் இருக்கும் என எஸ்.பி., தெரிவித்தார்.ரேஷன் அரிசி கடத்தல் ஒருவர் கைதுஉசிலம்பட்டி: தாலுகா போலீசார் இரவு ரோந்தில் மின் அலுவலகம் அருகே ஆம்னி வேனை நிறுத்தியபோது டிரைவர் தப்பி ஓடினார். வேனில்50 கிலோ எடை கொண்ட 10 ரேஷன் அரிசி மூடைகள் இருப்பது தெரியவந்தது. கடத்தி வந்தநாகமலைபுதுக்கோட்டை பார்த்தசாரதியை,45, கைது செய்தனர். தப்பி ஓடிய டிரைவர் கணேசனை தேடி வருகின்றனர்.விவசாயி பலிகள்ளிக்குடி: தென்னமநல்லுார் விவசாயி சமுத்திரம்,55. இவர் ெஹல்மெட் அணியாமல் டூ வீலரில் கள்ளிக்குடி வந்தார். அலங்கார மாரியம்மன் கோயில் எதிரே பள்ளப்பச்சேரி ராஜகுரு டூ வீலரில் ெஹல்மெட் அணியாமல் வந்தார். நேருக்கு நேர் டூவீலர்கள் மோதியதில் சமுத்திரம் இறந்தார்.-வாகனங்களுக்கு அபராதம்மேலுார்: நான்கு வழிச்சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய் வாகனசோதனை மேற்கொண்டார். ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 52 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தார்.மணல் திருட்டுவாகனங்கள் பறிமுதல்சமயநல்லுார்: எஸ்.ஐ.,சுந்தரமகாலிங்கம் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பரவை உப்பு ஓடையில் மணல் அள்ளிய கும்பல் தப்பி சென்றது. போலீசார் 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் சமயநல்லுார் ஆர்.ஐ.,வீரமணி ஊர்மெச்சிகுளம் பகுதியில் சவுடு மண் அனுமதியில் மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மதுரை ஆர்.டி.ஓ. விசாரணைக்கு இன்ஸ்பெக்டர் தர்மர் அனுப்பினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X