கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருத்தணி: கூட்டுறவு சர்க்கரை ஆலையின் புதிய இயக்குனர்கள் இடங்களில், அ.தி.மு.க., 13, விவசாய சங்கம், இரு இடம் பிடித்தன. ஐந்து பெண்கள் உட்பட, 17 பேர், இயக்குனர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.திருவாலங்காட்டில் இயங்கி வரும், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஐந்து பெண்கள் உட்பட, 17 பேர், இயக்குனர்களாக நியமிக்கப்படுவர். இதில் ஒருவர், நிர்வாக குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.இந்த புதிய இயக்குனர்களுக்கான தேர்தல், 12ம் தேதி, 14 ஓட்டுச்சாவடி மையங்களில் நடந்தது. தேர்தலில், ஆறு பெண்கள் உட்பட, 86 பேர் போட்டியிட்டனர். இதில், 32 ஆயிரத்து 289 வாக்காளர்களில், 4,752 பேர் மட்டுமே ஓட்டு அளித்தனர்.ஓட்டு எண்ணிக்கை, கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாக கிடங்கில், தேர்தல் அலுவலர் குணசேகரன் தலைமையில், நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு துவங்கியது. நேற்று அதிகாலை, 3:00 மணி வரை, ஒன்பது சுற்றுகளின் எண்ணிக்கை நடந்தது.இறுதியில், சரசா என்பவர், 2,448 ஓட்டுகள்; பத்மாவதி, 2,040 ஓட்டுகள்; ஜாக்னலி, 2,006 ஓட்டுகள் பெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.வெற்றி பெற்ற, ஐந்து பெண்கள் உட்பட, 17 பேருக்கும், தேர்தல் அலுவலர் சான்று வழங்கினார்.புதிதாக தேர்வு செய்த, இயக்குனர்களில், 13 பேர் அ.தி.மு.க.; விவசாய அணியில் இருவர்; தி.மு.க., - பா.ம.க., தலா ஒரு இடம் பிடித்தது.வரும், 16ல், 17 இயக்குனர்களில் ஒருவரை நிர்வாக குழுத் தலைவராக தேர்ந்தெடுத்து, பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X