கருணை கொலை கோரிய வழக்கில் சிறுவனுக்கு உதவ முன்வந்த மருத்துவர்கள்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கருணை கொலை கோரிய வழக்கில் சிறுவனுக்கு உதவ முன்வந்த மருத்துவர்கள்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை:சிறுவனை கருணைக் கொலை செய்ய கோரிய வழக்கில், மருத்துவ உதவி, நிதி உதவி அளிக்க, பலர் முன்வந்துள்ளனர். விசாரணையை, வரும், 23ம் தேதிக்கு, உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவைச் சேர்ந்த, திருமேனி என்பவர் தாக்கல் செய்த மனு:அனுமதிவலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட, என் மகனால் உட்கார முடியாது; மல்லாந்து படுத்த நிலையில் தான் எப்போதும் உள்ளான். வலுக்கட்டாயமாக, உணவை வாயில் ஊட்ட வேண்டும். மூளை பாதிக்கப்பட்டு இருப்பதால், குணமடைய வாய்ப்பே இல்லை என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, உணவு, மருந்து கொடுப்பதை நிறுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் கிருபாகரன், பாஸ்கரன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. டாக்டர்கள் குழு, சிறுவனை பரிசோதித்து, மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்தது.பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சிறுவனின் பெற்றோருக்கு, மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி அளிக்க முடியுமா; மருத்துவ உதவி வழங்க முடியுமா என்பதை, இந்த நீதிமன்றம் அறிய விரும்புகிறது. இது போன்ற குழந்தைகள் விஷயத்தில், பெற்றோருக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அரசிடம் திட்டம் உள்ளதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
வழக்கு, சமீபத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. டாக்டர் உமா மகேஸ்வரி என்பவர் ஆஜராகி, சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்கும்படி கோரினார். விசாரணைசிகிச்சை முறை பற்றியும், நீதிமன்றத்தில், அவர் விளக்கினார். ஆரணி, அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவர் கண்மணி என்பவர், சித்த வைத்திய முறை பற்றி விளக்கம் அளித்தார்.
வழக்கறிஞர், ஆர்.விவேகானந்தன் ஆஜராகி, ஜான் பிரபாகர் என்பவர், ஒரு லட்சம் ரூபாய்க்கு டி.டி., வழங்கி இருப்பதாக, நீதிமன்றத்தில் அளித்தார். சிறுவனுக்கு மருத்துவ மற்றும் நிதி உதவி அளிப்பதாக, 'பிரகன் பவுண்டேஷன்' அமைப்பின் சார்பில், வழக்கறிஞர் கணேஷ்ராம் ஆஜராகி தெரிவித்தார்.மத்திய அரசு உதவி சொலிசிட்டர் ஜெனரல், கார்த்திகேயன் ஆஜராகி, ''மத்திய அரசு தரப்பில், எந்த திட்டமும் இல்லை; விரைவில், திட்டம் கொண்டு வர, சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
மாநில அரசிடம் இருந்து விளக்கம் பெற, கூடுதல் அரசு பிளீடர் மதுமதி, அவகாசம் கேட்டார்.இதையடுத்து, ஆம்புலன்ஸ் உதவி கேட்டால், சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனை, 'டீன்' ஏற்பாடு செய்யும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 23ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X