ரஜினியுடன் கைகோர்ப்பதை தடுக்க காங்கிரசில் குஷ்புவுக்கு புது பதவி?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினியுடன் கைகோர்ப்பதை தடுக்க காங்கிரசில் குஷ்புவுக்கு புது பதவி?

Added : அக் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

நடிகர் ரஜினி துவக்க உள்ள புது கட்சியில், நடிகை குஷ்பு சேருவதை தடுக்க, தமிழக காங்கிரஸ் கட்சியில், தேர்தல் பிரசாரக் குழு தலைவர் பதவியை, அவருக்கு வழங்க, டில்லி மேலிடம் ஆலோசித்து வருகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, முன்னாள் தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, முன்னாள், எம்.பி.,க்கள் பீட்டர் அல்போன்ஸ், கே.எஸ்.அழகிரி, வர்த்தக பிரிவு தலைவர், வசந்தகுமார், தென் சென்னை மாவட்ட செயலர், கராத்தே தியாக ராஜன் போன்றவர்கள், டில்லியில் காய் நகர்த்தி வருகின்றனர்.
ஆனால், வரும் லோக்சபா தேர்தலை, திருநாவுக்கரசர் தலைமையில் சந்திக்க வேண்டும் என, காங்., தலைவர் ராகுல் விரும்புவதால், தலைவர் பதவிக்கு ஆபத்து இல்லை என, அரசரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.அதேசமயம், தமிழக காங்கிரஸ் கட்சியில், தேர்தல் பிரசாரக் குழு தலைவர், செயல் தலைவர்கள், தேர்தல் பணிக் குழு உறுப்பினர்கள் போன்ற, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
தற்போது, ம.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பணிகளில், ராகுல் தீவிரமாக இருப்பதால், இதற்கு, அவரது ஒப்புதல் கிடைக்கவில்லை.இதற்கிடையில், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, இந்த ஆண்டின் இறுதியில், ரஜினி துவக்க உள்ள, புதுக்கட்சியில் சேர உள்ளதாக தெரிகிறது. ரஜினி கட்சியில், குஷ்புவுக்கு, கொள்கை பரப்பு செயலர் பதவி வழங்கப்படும் என்ற பேச்சும் அடிபடுகிறது.
சமீப காலமாக, அரசியல் தொடர்பான விவாதங்களில், ரஜினியை, குஷ்பு அடிக்கடி பாராட்டி பேசி வருகிறார். சமூக வலைதளம் ஒன்றில், ரஜினி ரசிகர் ஒருவர், 'ரஜினியோடு சேர்ந்து, அரசியல் களத்தில் பயணிப்பீர்களா?' என, கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு குஷ்பு, 'நான், காங்கிரஸ் கட்சியில் மனநிறைவோடு இருக்கிறேன்' என, குறிப்பிட்டுள்ளார்.இதற்கு காரணம், தமிழக காங்கிரஸ் கட்சியின், தேர்தல் பிரசாரக் குழு தலைவராக, குஷ்புவை நியமிக்க, டில்லி மேலிடம் ஆலோசித்துள்ளது தான் என்கின்றனர்.
அதாவது, தெலுங்கானா மாநிலத்தில், தேர்தல் பிரசாரக் குழு தலைவராக, நடிகை விஜயசாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவரது சூறாவளி பிரசாரம், தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சிக்கு, கை கொடுத்து வருகிறது.அதே பாணியில், தமிழக காங்கிரசில், குஷ்புவுக்கு பதவி வழங்கினால், அவரது சுற்றுப்பயணம், காங்கிரஸ் கட்சிக்கு கைகொடுக்கும் என, முன்னாள் தலைவர் ஒருவர், டில்லி மேலிடத்திற்கு ஆலோசனை கூறியுள்ளார்.மேலும், குஷ்புவுக்கு பதவி கொடுப்பதன் வாயிலாக, அவர், ரஜினி கட்சிக்கு செல்வதையும் தடுக்க முடியும் என, அவர், மேலிடத்தில் தெரிவித்திருக்கிறார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-அக்-201806:58:19 IST Report Abuse
Bhaskaran காங்கிரஸுக்கு ஆதரவாக பல லட்சம் வாக்குகளை ?வாங்குவதற்கு குஷ்புவை விட்டால் வேறு நாதியில்லை இந்த தேசியக்கட்சிக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X