தி.மு.க.,வில் மீண்டும் களையெடுப்பு: ஸ்டாலின் கையில் பெரிய பட்டியல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வில் மீண்டும் களையெடுப்பு: ஸ்டாலின் கையில் பெரிய பட்டியல்

Added : அக் 14, 2018 | கருத்துகள் (18)
Advertisement
 தி.மு.க.,வில் மீண்டும் களையெடுப்பு: ஸ்டாலின் கையில் பெரிய பட்டியல்

தி.மு.க.,வில் நடந்த, கள ஆய்வு கூட்டத்துக்கு பின், 30 மாவட்டங்களில், கட்சியினர் களையெடுப்பு பணி முடிவடைந்துள்ளது. மீதமுள்ள, 35 மாவட்டங்களில், களையெடுப்பு பட்டியல் தயார் நிலையில் உள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மாவட்டச் செயலர்கள், 'கலக்கம்' அடைந்துள்ளனர்.
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தி.மு.க., 'டிபாசிட்' இழந்தது. இதனால், மாவட்ட வாரியாக, கட்சிப் பணிகள், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், செயல் தலைவராக இருக்கும் போதே, அதிரடி முடிவு எடுத்தார்.
தி.மு.க.,வுக்கு, கட்சி அமைப்பு ரீதியாக, 65 மாவட்டங்கள் உள்ளன. சென்னை, அறிவாலயத்தில், பிப்., 1 முதல் துவங்கிய கள ஆய்வு பணி, ஏப்., 30ல் முடிவடைந்தது. அதன் அடிப்படையில், கோவை, நாமக்கல் மாவட்டச் செயலர்களின் பதவி பறிக்கப்பட்டது.


30 மாவட்டங்கள்



ஈரோடு, திருப்பூர் உட்பட, பல மாவட்டங்களில், செயல்படாத நிர்வாகிகள் மாற்றப்பட்டனர்.
தொடர்ந்து, மதுரை, தேனி, ராமநாதபுரம் மாவட்டச் செயலர்கள் மாற்றப்பட்டனர்.அவர்களை தொடர்ந்து, மதுரை மாநகர், வடக்கு, தெற்கு, தேனி, துாத்துக்குடி தெற்கு, வடக்கு, கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி கிழக்கு, மேற்கு, மத்தி உட்பட, 13 மாவட்டங்களின் ஒன்றிய, நகர, வட்ட நிர்வாகிகளும் மாற்றப்பட்டனர்.
ஏற்கனவே, 30 மாவட்டங்களில், களையெடுப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், ஆக., 7ல், தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி, உடல் நலக்குறைவு காரணமாக, மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு பின், தலைவர் பதவியை, ஸ்டாலின் ஏற்றார்.தொடர்ந்து, கட்சியின் செயற்குழு, பொதுக்குழு, மாவட்டச் செயலர்கள் கூட்டங்கள், மத்திய - மாநில அரசுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம், முப்பெரும் விழா போன்ற நிகழ்ச்சிகளில், ஸ்டாலின் தீவிரமாக இருந்ததால், மீதமுள்ள, 35 மாவட்டங்களில் எடுக்க வேண்டிய களையெடுப்பு பணிகளில், சுணக்கம் ஏற்பட்டது.
திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு பின், களையெடுப்பு பணிகள் நடத்தலாம் என, கட்சி தலைமை கருதியது. ஆனால், தற்போது தேர்தல் அறிவிப்பு வெளியாகவில்லை என்பதால், மீண்டும் களையெடுப்பு பட்டியலை தயார் செய்ய, ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதனால், பதவி பறிபோக உள்ள மாவட்டச் செயலர்கள், நகர, ஒன்றிய நிர்வாகிகள், கலக்கம் அடைந்துள்ளனர்.


கோஷ்டி சண்டை



இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:தற்போது, அறிவாலயத்தில் மீண்டும், மாவட்ட வாரியாக பஞ்சாயத்து நடக்கிறது.சில நாட்களாக, சென்னை வடக்கு, கன்னி யாகுமரி, திருநெல்வேலி போன்ற மாவட்ட, தி.மு.க.,வில் நிலவும் கோஷ்டி சண்டையால், மாவட்டச் செயலர்கள் மீது, புகார்கள் குவிந்துள்ளன.திருவள்ளூர் மாவட்ட சட்டப் பிரிவு நிர்வாகி ஒருவர் மீது, 300 புகார் மனுக்கள் விசாரணைக்கு வந்துள்ளன; அவற்றின் மீது, விசாரணை நடக்கிறது.
விசாரணை முடிந்த பின், சென்னை, திருவள்ளூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில், மாற்றப்படவுள்ள நிர்வாகிகளின் பட்டியல் தயாராக உள்ளது.அனைத்து மாவட்டங்களிலும், களையெடுப்பு பணி முடிவடைந்ததும், மாவட்ட வாரியாக ஸ்டாலின் சுற்றுப்பயணம் சென்று, 'பூத் கமிட்டி' நிர்வாகிகளை சந்தித்து, லோக்சபா தேர்தல் பணிகளை துவக்க திட்டமிட்டு உள்ளார்.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா
17-அக்-201810:13:20 IST Report Abuse
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar கலையெடுப்பின் இறுதியில் பூச்சியமே மிஞ்சும்.
Rate this:
Share this comment
Cancel
Sundar - Chennai,இந்தியா
14-அக்-201819:47:14 IST Report Abuse
Sundar எல்லாரையும் கலை எடுத்தபின்பு மிஞ்சப்போவது அவர் குடும்பம் மட்டும்தான்
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
14-அக்-201816:54:58 IST Report Abuse
mindum vasantham ஜெயலலிதா போல் மாவட்ட செயலாளரை அடக்கி ஆழ முடியும் என்று காமித்து கொள்கிறார் , திமுக கட்டமைப்பே வேறு மாவட்ட செயலாளர்கள் தான் கலைஞரை அடக்கினார் ஸ்டாலினுடன் நடக்க போவதும் அதுவே ,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X