'டிரான்ஸ்பர்' வாங்கியவர்கள் பாவம் பணியிடம் வழங்குவதில் அலட்சியம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'டிரான்ஸ்பர்' வாங்கியவர்கள் பாவம் பணியிடம் வழங்குவதில் அலட்சியம்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மின் வாரியத்தில், 'டிரான்ஸ்பர்' பெற்றவர்களுக்கு, புதிய பணி இடத்தை ஒதுக்காமல், அலட்சியம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
மின் வாரியத்தில், கணக்கீட்டாளர், உதவி பொறியாளர், உதவியாளர் என, 86 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், விருப்ப மனு பெறப்பட்டு, இடமாறுதல் வழங்கப்படுகிறது. ஒரே இடத்தில், பல ஆண்டுகளாக பணிபுரிவோர், கால முறையில் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
அதாவது, ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை, கட்டாயம் இடமாற்றம் செய்வதாகும். இந்நிலையில், மருத்துவச் சிகிச்சையில் இருப்பவர்கள், சிறு வயது குழந்தை வைத்திருப்போர் போன்ற ஊழியர்களுக்கு, அவர்களின் சிரமத்தை கருதி, மின் வாரியம், இடமாறுதல் வழங்குகிறது.
இடமாறுதல் ஆணை பெற்று, பல மாதங்கள் ஆகியும், அவர்களை, புதிய அலுவலகத்திற்கு அனுப்பாமல், பொறியாளர்கள், அலட்சியம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதனால், ஆணையை பெற்ற பலரும், புதிய இடத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து, மின் வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க பொதுச்செயலர், சுப்ரமணியன் கூறியதாவது:
பிரிவு அலுவலகத்தில் பணிபுரியும், கணக்கீட்டாளர் உள்ளிட்டோருக்கு இடமாறுதல் வழங்கினால், சம்பந்தப்பட்ட அலுவலக பொறியாளர்களே, அவர்களை, புதிய இடத்திற்கு அனுப்பலாம். பலர், அவ்வாறு அனுப்புவதில்லை.இதனால், இடமாறுதல் ஆணை பெற்றவர்களை, 10 - 15 நாட்களுக்குள், புதிய இடத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற, விதியை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான், அதை பின்பற்ற வேண்டிய கட்டாயம் வரும்.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X