இன்று ஹெல்மெட், சீட் பெல்ட் ஊர்வலம்; பட்டிமன்றம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று ஹெல்மெட், சீட் பெல்ட் ஊர்வலம்; பட்டிமன்றம்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:உலக விபத்து தினத்தை முன்னிட்டு மதுரையில் தேவதாஸ் மருத்துவமனை சார்பில் ஹெல்மெட், சீட் பெல்ட் விழிப்புணர்வு டூவீலர் ஊர்வலம் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று (அக்.,14) காலை 8:30 மணிக்கு துவங்குகிறது. இந்நிகழ்ச்சியை தினமலர் இணைந்து வழங்குகிறது.இம்மருத்துவமனையில் மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் முதலுதவி செயல்முறை பயிற்சி முகாம் அக்.,12ல் துவங்கியது.மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளை, துறை வல்லுனர்கள் அளித்து வருகின்றனர். முகாம் நிறைவு நாளான இன்று காலை 10:30 முதல் இரவு 7:30 மணி வரை சிறப்பு மருத்துவ நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஹெல்மெட், சீட் பெல்ட் ஊர்வலம் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று துவங்கி தேவதாஸ் மருத்துவமனையில் நிறைவடைகிறது.

'சாலை விபத்து, உயிர் இழப்பிற்கு பெரிதும் காரணம், வாகன ஓட்டுனர்களா, பொதுமக்களா' எனும் தலைப்பில் பேச்சாளர் எஸ்.ராஜா தலைமையில் பட்டிமன்றம் தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் இன்று மாலை 5:00 மணிக்கு நடக்கிறது. அனைத்திலும் பங்கேற்க அனுமதி இலவசம். தொடர்புக்கு 0452 - 452 1000.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X