மொபைல் போனில் மூழ்கும் ஸ்டாலின்!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மொபைல் போனில் மூழ்கும் ஸ்டாலின்!

Added : அக் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அடிக்கடி மொபைல் போனில் மூழ்கி விடுவதாக, தி.மு.க., வட்டாரத்தில் புகார் சொல்லப்படுகிறது.இது குறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
மொபைல் போனில், இணையதளங்கள், சமூக வலைதளங்களை பார்வையிடுவதில், பலரும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதற்கு, அரசியல் தலைவர்களும் விதிவிலக்கல்ல. தலைவர்கள் பலரும், சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை, அவ்வப்போது பதிவிட்டு வருகின்றனர். இதன் வாயிலாக, இளைய தலைமுறையினரை கவர முடியும் என, அவர்கள் கணக்கு போடுகின்றனர்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், சமூக வலைதளங்களில், நாள்தோறும் பல்வேறு கருத்துகளை யும், தன் அறிக்கைகளையும் பதிவிட்டு வருகிறார். தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியினர், இவற்றை பரப்பும் பணியில் ஈடுபடுகின்றனர்.இந்நிலையில், ஆரம்பத்தில், மொபைல் போன் பயன்படுத்துவதில், ஆர்வம் குறைந்திருந்த ஸ்டாலின், இப்போது, அதற்கு தான் அதிக நேரம் செலவிடுகிறார்.
கட்சி நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்களில் பங்கேற்க செல்லும் அவர், நிகழ்ச்சி துவங்குவதற்கு காத்திருக்கும் நேரத்தில், மொபைல் போனில் இணையதளங்கள், சமூக வலைதளங்களை பார்வையிடுவதில் தான் கவனம் செலுத்துகிறார்.காரில் செல்லும் போது கிடைக்கும் நேரத்திலும், மொபைல் போனில் மூழ்கி விடுகிறார். இதனால், சாலையில் என்ன நடக்கிறது என்பதை, அவர் கவனிப்பது கிடையாது.
காரில், ஸ்டாலின் செல்வதை பார்த்து, வணக்கம் செலுத்தும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை, அவர் கண்டுகொள்வது இல்லை.மொபைல் போனில், தனக்கு நெருக்கமானவர்கள் அனுப்பும், 'வீடியோ'க்களையும், 'மீம்ஸ்'களையும் அதிகம் பார்க்கிறார்.உடன் பயணிக்கும் நிர்வாகிகள் சொல்வதை, அவர் கேட்பது கிடையாது. 'தலைவர், மொபைல் போனில் பிசியாக இருக்கிறார்' என, அவர்களும் பல முக்கிய தகவல்களை சொல்வதற்கு தயங்குகின்றனர். இது, கட்சி வளர்ச்சியை பாதிக்கும்.இவ்வாறு, கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-அக்-201807:00:43 IST Report Abuse
Bhaskaran இதுவும் ஒருவகையான கட்சி பணி தான் ஐயா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X