வந்தது வாரிசு; தந்தது உற்சாகம்!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வந்தது வாரிசு; தந்தது உற்சாகம்!

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

விஜயகாந்த் மகனின் அரசியல் பிரவேசத்தால், தே.மு.தி.க.,வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தே.மு.தி.க.,வில், விஜய காந்த் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோர் அதிகார மையங்களாக உள்ளனர். நிர்வாகிகள் நியமனம், நிகழ்ச்சிகள் ஏற்பாடு உள்ளிட்ட பணிகளை, சுதீஷ் கவனித்தார். கூட்டணி பேச்சு, தேர்தல் பிரசாரம் உள்ளிட்டவற்றில், பிரேமலதா கவனம் செலுத்தினார்.
பிரேமலதாவின் கூட்டணி முடிவால், தே.மு.தி.க., தொடர் தோல்விகளை சந்தித்தது. சில ஆண்டுகளாக, விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றும், விஜயகாந்த் உடல்நிலையில் பெரிய அளவில் முன்னேற்றமில்லை. இது, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.
விஜயகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடாவிட்டாலும், நிகழ்ச்சிகளுக்கு வந்து, கையசைத்தாலே போதும் என்ற மனநிலைக்கு, கட்சி யினர் வந்துள்ளனர். அதேநேரத்தில், கட்சியை வழிநடத்த, சரியான ஆள் வேண்டும் என்றும், அவர்கள் எதிர்பார்த்தனர்.இதை, தன் நெருங்கியநண்பர்கள் வாயிலாக அறிந்த விஜயகாந்த், மூத்த மகன் விஜயபிரபாகரனை, களமிறக்கியுள்ளார்.
சமீபத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த, கட்சி நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவிகளை வழங்கி,பிரபாகரன் பேசினார்.அவரது பேச்சு, ஆரம்ப காலத்தில் விஜயகாந்த் பேசியது போன்று, கட்சி யினரை வெகுவாக கவர்ந்துள்ளது. இதை, சமூக வலைதளங்களில், தே.மு.தி.க.,வினர் பரப்பி வருகின்றனர்.விஜயகாந்த் மகனின் அரசியல் பிரவேசத்தால், தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், நீண்ட நாட்களுக்கு பின், உற்சாகம் அடைந்துள்ளனர்.
இது குறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:விஜயகாந்த் மகன் பிரபாகரன், கட்சியின் ஒரே நம்பிக்கையாக உள்ளார். தந்தையைப் போலவே, அனைவரிடமும் எளிமையாக பழகும் தன்மை, அவரிடம் உள்ளது. தந்தை ஆலோசனைப்படி, அவர் கட்சியை வழிநடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, தொண்டர்களிடம் உள்ளது.
காஞ்சிபுரத்தை தொடர்ந்து, அவரை வைத்து விழா நடத்த, பல மாவட்டச் செயலர்கள் போட்டி போடுகின்றனர். விஜயபிரபாகரன் வருகை, கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது உண்மை.இவ்வாறு, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X