மலையேற்ற விதிகள்: வனத்துறை அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மலையேற்ற விதிகள்: வனத்துறை அறிவிப்பு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை:தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின பகுதிகளில், மலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
தேனி மாவட்டம், கொட்டக்குடி காப்புக்காடு பகுதியில், மார்ச், 11ல் ஏற்பட்ட காட்டுத் தீயில், மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டோர் இறந்தனர். இது குறித்த, விரிவான விசாரணைக்கு, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.அதன்படி, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி விசாரணை நடத்தினார்.
இனி வரும் காலங்களில், விபத்துகளை தவிர்க்க, பல்வேறு பரிந்துரைகள், அரசுக்கு அளிக்கப் பட்டன. அந்த வகையில், அனைத்து காப்புக் காடுகளுக்கும், வன உயிரின பகுதிகளுக்கும் பொருந்தும் வகையில், மலையேற்றத்திற்கான விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அவற்றின் விபரம்:
*மலையேற்றம் மேற்கொள்ள விரும்பும் குழுவினர் அல்லது நபர்கள், அந்தந்த மாவட்ட வன அலுவலர், வன உயிரின காப்பாளர், துணை இயக்குனரின் முன்னனுமதியை பெற வேண்டும்
* மலையேற்றம் செய்யும் பாதைகள், 'எளிதான பாதை, மிதமான பாதை, கடினமான பாதை' என, மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எளிதான பாதைக்கு, நபருக்கு, 200 ரூபாய்; மிதமான பாதைக்கு, 350 ரூபாய்; கடினமான பாதைக்கு, 500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
* வெளிநாட்டு பயணியருக்கு, எளிதான பாதைக்கு, நபருக்கு, 1,500 ரூபாய்; மிதமான பாதைக்கு, 3,000 ரூபாய்; கடினமான பாதைக்கு, 5,000 ரூபாய் கட்டணம்
* எளிதான மற்றும் மிதமான பாதைகளில், மலையேற்றம் மேற்கொள்வோர், தங்களுடன் ஒரு வழிகாட்டியையும், கடின பாதையில் மலையேற்றம் மேற்கொள்வோர், ஒரு வழிகாட்டி மற்றும் வன ஊழியர் ஒருவரை, உடன் அழைத்துச் செல்ல வேண்டும்
* வனத்துறையில் பதிவு செய்யாத நிறுவனம், சங்கம், அமைப்பு, மலையேற்ற பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்ய இயலாது
* மலையேற்ற பயிற்சி மேற்கொள்வதற்கு, தடை செய்யப்பட்ட காலம், வழித்தடப் பயன்பாடு, மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள வேண்டிய நேரம் ஆகியவற்றை உள்ளடக்கி, இவ்விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.சுற்றுலா பயணியர் மற்றும் மலையேற்ற பயிற்சி மேற்கொள்வோர், புதிய விதிகளை கடைபிடித்து, வனத்துறைக்கும், அரசுக்கும், ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, வனத்துறை முதன்மைச் செயலர், ஷம்பு கல்லோலிகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X