'இடைத்தேர்தல் அறிவிப்பில் அரசியல்'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'இடைத்தேர்தல் அறிவிப்பில் அரசியல்'

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அவனியாபுரம்:''திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்படாததற்கு அரசியல் காரணம் உள்ளது,'' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியாதவது: முதல்வர் மீதான நெடுஞ்சாலை ஒப்பந்த புகாரில் சி.பி.ஐ., விசாரணை நடக்க இருப்பதால் அவர் பதவி விலகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லையெனில் விசாரணை நேர்த்தியாக இருக்க வாய்ப்பில்லை. அமைச்சர், அதிகாரிகள் மீது ஊழல் புகார்கள் உள்ளன. இதைப்பற்றி அரசு கவனம் கொள்ளவில்லை. இடைத்தேர்தல் அறிவிக்கப்படாததற்கு உள்நோக்கம் உள்ளது. மழை, புயலை காரணம் காட்டுவது ஏற்புடையதல்ல, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X