இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அக்டோபர் 14, 1935
பி.வெங்கட்ராமன்: புதுக்கோட்டையில், பரசுராம் - அலர்மேலு தம்பதிக்கு மகனாக, 1935 அக்., 14ல் பிறந்தார். அவர் தந்தை நடத்தி வந்த, அச்சுக் கூடத்தில், சிறுவர் இதழ்கள் அச்சாகி வந்தன. அச்சு கோர்க்க பழகிய இவர், பல படைப்புகளை, குறிப்பாக, குழந்தை கவிஞரின் பாடல்களை, எழுத்துகளை அடுக்கும்போதே படித்து பரவசப்படுவார். அந்த ஆர்வத்தில், குழந்தை எழுத்தாளராக மாறிய, இவர், 1954ல், 'டிங்டாங்' இதழுக்கு ஆசிரியராகவும், 'இலக்கிய சாரல்' என்ற மாணவர் இதழுக்கு, சிறப்பாசிரியராகவும் இருந்தார். எர்ணாகுளம் முத்தமிழ் சங்க செயலர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார்.பொது நிர்வாகத்தில், முதுகலை பட்டம் பெற்றிருந்த, இவர், டி.வி.எஸ்., நிறுவனத்தின், மக்கள் தொடர்பு அதிகாரியாக பொறுப்பு வகித்தார். வாழ்நாள் சாதனையாளர், மனிதநேய செல்வர் உள்ளிட்ட, விருதுகளை பெற்றார். குழந்தை இலக்கிய எழுத்தாளர், பி.வெங்கட்ராமனின் பிறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X