சபரிமலையை சுற்றுலா தலமாக்க கூடாது:தேவசம் போர்டு முன்னாள் தலைவர் கருத்து | Dinamalar

பொது செய்தி

இந்தியா

சபரிமலையை சுற்றுலா தலமாக்க கூடாது:தேவசம் போர்டு முன்னாள் தலைவர் கருத்து

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சபரிமலை:''சபரிமலையை சுற்றுலா தலமாக மாற்றக்கூடாது,'' என, தேவசம் போர்டு முன்னாள் தலைவர், பிரயார் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதை அமல்படுத்த கேரள அரசும், திருவாங்கூர் தேவசம் போர்டும் முயற்சித்து வருகின்றன. இதற்கு எதிராக, கேரளாவில் போராட்டம் நடந்து வருகிறது.
இது குறித்து, தேவசம் போர்டு முன்னாள் தலைவர், பிரயார் கோபாலகிருஷ்ணன் கூறிய தாவது:சபரிமலையை சுற்றுலாதலமாக மாற்றக்கூடாது. சபரிமலைக்கு பெண்கள் வந்தால், நான் அங்கு செல்ல மாட்டேன். தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசும், கேரள மாநில அரசும், சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


மேல்சாந்தி நேர்முக தேர்வு



சபரிமலை மேல்சாந்தி நியமனத்திற்கான நேர்முகத் தேர்வு, நேற்று திருவனந்தபுரத்தில் துவங்கியது. தந்திரி கண்டரரு ராஜீவரரு, தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கமிட்டியில் தன்னையும் சேர்க்கும்படி, தந்திரி கண்டரரு மோகனரரு கொடுத்த மனுவை, உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X