சபரிமலை விவகாரம்: பா.ஜ.,வுக்கு ஆதாயம்!| Dinamalar

சபரிமலை விவகாரம்: பா.ஜ.,வுக்கு ஆதாயம்!

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கேரளாவில், சபரிமலை விவகாரத்தை, பா.ஜ., கையில் எடுத்திருப்பது, ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு, நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், தமிழகத்திலும், அய்யப்ப பக்தர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்க, பா.ஜ., முடிவு செய்துள்ளது.
கேரளாவில் உள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, ஆண்கள் மட்டுமே செல்வது வழக்கம். அவர்களுடன், 10 வயதிற்குட்பட்ட சிறுமியர், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் செல்வர். இது, காலம் காலமாக தொடரும் வழக்கம்.இந்நிலையில், சபரிமலையில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை, கேரள அரசு வரவேற்றது; அதை எதிர்த்து, மேல்முறையீடு செய்யவும் இல்லை.இது, அய்யப்ப பக்தர்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை, பா.ஜ., இளைஞர் அணி கையில் எடுத்துள்ளது.பா.ஜ., இளைஞர் அணி தேசிய துணைத் தலைவர், முருகானந்தம் தலைமையில், கட்சி நிர்வாகிகள், கேரளாவில், 821 இடங்களில், சபரிமலை விவகாரத்தில், மேல்முறையீடு செய்யாத, கம்யூனிஸ்ட் அரசை கண்டித்து, ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை மற்றும் நிர்வாகிகளும், போராட்டத்தில் பங்கேற்றனர். கேரளாவில், பெரும்பான்மையாக உள்ள, ஈழுவா சமூகத்தைச் சேர்ந்தவர்களில் ஏராளமானோர், கம்யூனிஸ்ட் ஆதர வாளர்களாக உள்ளனர். அவர்களில் பலர், அய்யப்ப பக்தர்கள்.அவர்களுக்கு, அரசின் முடிவு ஏமாற்றத்தை தந்துள்ளது.
இதை, தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள, பா.ஜ., மேற்கொண்ட நடவடிக்கை, நல்ல பலனை கொடுத்து உள்ளது.அரசுக்கு எதிரான போராட்டத்தில், அவர்கள் அதிக அளவில் பங்கேற்று உள்ளனர். சபரிமலை விவகாரம், பா.ஜ.,விற்கு செல்வாக்கை அதிகரிக்க உதவியுள்ளது. அதேபோல், தமிழகத்திலும், அய்யப்ப பக்தர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்க, பா.ஜ., முடிவு செய்துள்ளது.


பாதிரியார்களுக்கு வலை!



'பா.ஜ.,வில், சிறுபான்மையினருக்கு அதிக முக்கியத்துவம் இல்லை' என்ற எண்ணம், தமிழக மக்களிடம் உள்ளது. இதை மாற்றுவதற்காக, கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் முஸ்லிம் பிரமுகர்களை, பா.ஜ.,விற்கு இழுக்க, அக்கட்சியின் இளைஞர் அணி நிர்வாகிகள், நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.கேரளாவில் சமீபத்தில், இரண்டு பாதிரியார்கள், பா.ஜ.,வில் இணைந்தனர். அதன்பின், பா.ஜ.,வில் கிறிஸ்தவர்கள் இணைவது அதிகரித்துள்ளது.
அதே பாணியில், மதுரை மாவட்டத்தில், சில கிறிஸ்தவ பாதிரியார்களுடன், பா.ஜ., இளைஞர் அணியினர் பேச்சு நடத்தி முடித்து உள்ளனர்.இம்மாதம் இறுதியில், இரண்டு பாதிரியார்கள் மற்றும் சில முஸ்லிம் எழுத்தாளர்கள், பா.ஜ.,வில் இணைய உள்ளதாக, அந்த அணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X