பீஹாரைச் சேர்ந்த தொழிலாளி குஜராத்தில் அடித்துக் கொலை| Dinamalar

பீஹாரைச் சேர்ந்த தொழிலாளி குஜராத்தில் அடித்துக் கொலை

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சூரத்:குஜராத்தில் இருந்து வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வெளியேறி வரும் நிலையில், சூரத் நகரில், பீஹாரைச் சேர்ந்த தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டார்.
குஜராத்தில் உள்ள சபர்காந்தா மாவட்டத்தில், 14 மாத பெண் குழந்தையை, பீஹாரைச் சேர்ந்த, 19 வயது தொழிலாளி, சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தான்.அதையடுத்து, பீஹார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக, குஜராத்தில் போராட்டம் வெடித்தது. பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்தன.
இந்த போராட்டங்களை அடுத்து, வெளி மாநிலங்களைச் சேர்ந்த, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குஜராத்தில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், 15 ஆயிரம் பேர் வெளியேறியதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சூரத் நகரில், அமர்ஜித் சிங், 34, என்ற தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டு உள்ளார். பீஹாரின் கயாவைச் சேர்ந்த இவர், 17 ஆண்டு களாக, குஜராத்தில் வசித்து வந்தார். இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.சூரத் நகரில் நேற்று முன்தினம் வேலையில் இருந்து திரும்பியபோது, அவரை சூழ்ந்த ஒரு கும்பல், சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில், பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார்.வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்வதால், குஜராத்தில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X