இணையதள தகவல்கள் உறுதி செய்ய வேண்டும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இணையதள தகவல்கள் உறுதி செய்ய வேண்டும்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரைக்குடி:காரைக்குடி அழகப்பா பல்கலை மைய நுாலகம் சார்பில் 'டீ-ஸ்பேஸ்' என்ற மென்பொருளை வைத்து எவ்வாறு முனைவர் பட்ட ஆய்வறிக்கைகளை மின்னணு ஆய்வறிக்கைகளாக மாற்றுவது என்பது பற்றிய தேசிய கருத்தரங்கம் நடந்தது.துணைவேந்தர் ராஜேந்திரன் பேசியதாவது: ஒரு காலத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் பல கல்வி நிறுவனங்களுக்கு சென்று நுால்களை படித்து தங்களுக்கு வேண்டிய தகவல்களை சேகரித்தார்கள். ஆனால், இன்றோ இணையதளம் மூலம் எல்லா தகவல்களையும் பெற முடிகிறது. அவ்வாறு பெறப்பட்ட தகவல்கள் மதிப்பு மிக்கதா, நம்பகத்தன்மை உடையதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நுாலகர்கள் புத்தகங்கள், இதழ்கள் மற்றும் ஆய்வறிக்கைகளை மின்னணு முறையில் மாற்றுவதற்கு தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும், என்றார்.நிகழ்ச்சியில் திருச்சி இந்திய மேலாண்மை நிறுவன நுாலகர் இளவழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கருத்தரங்க செயலாளர் கணசேன் வரவேற்றார். மைய நுாலகர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X