ஆதார்கார்டு பார்த்து கொசு பரவுவதில்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆதார்கார்டு பார்த்து கொசு பரவுவதில்லை

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரைக்குடி:''கொசு பரவும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழிப்பதை, இயக்கமாக கொண்டு செயல்படுத்த வேண்டும்'' என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.காரைக்குடியில் அழகப்பா பல்கலையில் டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாமில் அவர் பேசியதாவது: 'வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்டாகிராமில்' ஈடுபடுபவர்கள் காய்ச்சல் முன் எச்சரிக்கையில் ஈடுபடுவதில்லை. பேசுவதற்கு முன்பு மீம்ஸ் போடும் மாணவர்கள், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வில் ஈடுபட வேண்டும். நோய் வந்த பிறகுதான் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கும். அதற்கு முன்பு நாம் தான் தடுக்க வேண்டும்.2 மி.மீ., தண்ணீரில் கூட டெங்கு, சிக்கன்குனியா பரப்பும் 'ஏடிஸ்' கொசு உருவாகும். என், வீடு உன் வீடு என்று ஆதார் கார்டு கேட்டு பரவுவதில்லை. சிவகங்கை மாவட்டத்தில் மூடிய வீடுகள் கொசுவை உருவாக்கும் இடங்களாக உள்ளது. பொதுமக்கள் இயக்கமாக சேர்ந்து தடுக்க வேண்டும், என்றார்.சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பர்மா காலனி பகுதியில் ஆய்வில் ஈடுபட்ட அவர் கூறியதாவது: சங்கராபுரம் ஊராட்சியை பேரூராட்சியாகவோ, நகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக வருவாய் துறையிடம் பரிந்துரைக்கப்படும். காரைக்குடி அரசு மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான நிதி விடுவிப்பது தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும், என்றார். தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டார். உடன் கலெக்டர் ஜெயகாந்தன், சப்-கலெக்டர் ஆஷா அஜீத் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X