முதல்வர் மீது அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் மீது அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு

Added : அக் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்:'தமிழக முதல்வர், சர்வாதிகாரி போல செயல்படுகிறார்' என, 'ஜாக்டோ - ஜியோ' மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.
'புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
நவ., 27 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கான ஆயத்த மாநாடு, நேற்று சேலத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மீனாட்சி சுந்தரம், சுப்பிரமணியன் ஆகியோர், அளித்த பேட்டி:எங்களது நியாயமான கோரிக்கைகளை, இரண்டு ஆண்டுகளாக, அரசிடம் வைத்து வருகிறோம். அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகிறது.
மேலும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அவதுாறாகவும் பேசி வருகின்றனர்.இந்த அலட்சியப் போக்கை கண்டித்து, நவ., 27 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். இதில், அனைத்து சங்கங்களும் பங்கேற்பதால், அனைத்து பணிகளும் முடங்கும்.தமிழகத்தில் இதுவரை இருந்த முதல்வர்கள், அரசு ஊழியர்களை அழைத்து பேசி தீர்வு கண்டனர்.
தற்போது உள்ள முதல்வர், அழைத்து பேசாமல், சர்வாதிகாரி போல செயல்படுகிறார். உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால், லோக்சபா தேர்தலில், அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-அக்-201806:54:22 IST Report Abuse
Bhaskaran நீங்க எந்த சமயத்திலே அதிமுகவுக்கு ஆதரவாக இருந்தீர்கள் திமுகவுக்கு ஆதரவாகத் தானே கள்ளவாக்குகளை போட முழு ஆதரவுதருவீங்க உங்கள் நடவடிக்கையை மக்கள் கவனிச்சுட்டுதான் இருக்காங்கா இம்மாதிரி பேச்சு பேசின உள்ளபோட்டு நொங்கெடுக்கணும் எப்பப்பாரு சம்பளவுயர்வு இல்லேன்னா வேலைநிறுத்தம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X