சபரிமலையில் பெண்கள் அனுமதி காரைக்குடியில் எதிர்ப்பு போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சபரிமலையில் பெண்கள் அனுமதி காரைக்குடியில் எதிர்ப்பு போராட்டம்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரைக்குடி:சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை மறு சீராய்வு செய்ய வலியுறுத்தி, காரைக்குடியில் 'சபரிமலையின் புனிதம் காப்போம்' என்ற தலைப்பில் வட்டார ஐயப்ப பக்தர்கள் மற்றும் சேவா சங்கத்தினர்,பெரிச்சியம்மன் கோயில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் சரணகோஷ ஊர்வலம் கண்ணதாசன் மணிமண்டபத்திலிருந்து தொடங்கியது.நுாறடிரோடு, செக்காலைரோடு, கல்லுக்கட்டி வழியாக கொப்புடையம்மன் கோயிலில் முடிவடைந்தது. இறையாண்மை மிக்க பாரததேசத்தில் ஐயப்பசுவாமி தவக்கோலத்தில் வீற்றிருக்கும் சபரிமலை ஆலயத்தில், ஐதீக முறைகளுக்கு மாறாக அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.இது ஐயப்ப பக்தர்களையும், ஆன்மிகவாதிகளையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. ஐதீக முறைகளுக்கு எதிராக வழங்கப்பட்டிருக்கும் இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறு சீராய்வு செய்ய வேண்டும் என ஊர்வலத்தில் வலியுறுத்தினர்.

காரைக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த அனைத்து ஐயப்ப பக்தர்கள், குருசாமிகள், ஆன்மிக பெரியோர்கள், பெண்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X