மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்ட மூதாட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்ட மூதாட்டி

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரைக்குடி:காரைக்குடி அரசு மருத்துவமனையில் சுகாதார துறை செயலர் ஆய்வு மேற்கொள்ள வருவதையொட்டி, சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.காரைக்குடி மகர்நோன்பு பொட்டல் பகுதியை சேர்ந்தவர் சரசம்மாள்,57. ஆதரவற்ற நிலையில் குப்பை பொறுக்கி அதில் வரும் வருமானத்தால் வாழ்க்கையை ஓட்டி வந்தார். திருமணம் ஆகாத நிலையில், சங்கரன் எனும் லோடு ரிக் ஷா ஓட்டுபவர் கவனித்து வந்தார். காய்ச்சலுக்காக, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று மருத்துவமனையில் ஆய்வுக்கு வருவதை முன்னிட்டு காலையில் அவசர, அவசரமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.சரஸ்வதி கூறும்போது: யாரோ மந்திரி வருகிறார் என்பதற்காக என்னை வெளியே அனுப்பி விட்டனர். வீடெல்லாம் கிடையாது, என்றார்.இதையறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சங்கரன் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தார்.ஆய்வில் ஈடுபட்ட ராதாகிருஷ்ணன் அந்த மூதாட்டியிடம் சென்று நலம் விசாரித்ததுடன், ''உறவினர் வரும் முன்பு டிஸ்சார்ஜ் செய்தது குறித்து விசாரணை நடத்துமாறு,'' இணை இயக்குனர் விஜயன் மதமடக்கியிடம் கூறி சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X